ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விவாகரத்து.. இரண்டாவது திருமணம்? லீக்கான சீரியல் நாயகி மின்னல் தீபாவின் போட்டோ

விவாகரத்து.. இரண்டாவது திருமணம்? லீக்கான சீரியல் நாயகி மின்னல் தீபாவின் போட்டோ

மின்னல் தீபா

மின்னல் தீபா

தீபாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்கானது. ஆனால் அதுகுறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மின்னல் தீபா என்றால் வெள்ளித்திரையிலும் சரி சின்னத்திரையிலும் சரி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். மாயி படத்தில் இடம்பெற்ற வாம்மா மின்னல் காமெடி மூலம் பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஆனார். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகை ரோலில் நடித்து வந்தார். அப்போது தான் சின்னத்திரையில் இவரின் முகத்தை பார்க்க முடிந்தது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான மானா மயிலாட நடன நிகழ்ச்சியில் தீபா கலந்து கொண்டார்.

இங்கு தான் இவரின் முதல் காதலும் மலர்ந்தது. இதே மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன உதவி இயக்குநரான ரமேஷ் என்பவரை தீபா காதலித்து வந்தார். இவர்களின் காதல் இருவீட்டார் சம்மத்துடன் திருமணத்தில் முடிந்தது. ரமேஷூம் - தீபாவும் தங்களது திருமண நிகழ்வுகளை பற்றி விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகிர்ந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிக் பாஸ் புகழ் அர்ச்சனா. கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. பின்பு தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பதில் தீபா கவனம் செலுத்தி வந்தார்.

கணவருடன் ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோவிலும் தீபா கலந்து கொண்டார். இந்நிலையில் தான் திடீரென்று இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் உலா வந்தன. குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்ததாக தெரிந்தது. இந்நிலையில் ஜீதமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் தீபா ஜிலேபி என்ற ரோலில் நடித்தார். இந்த சிரியல் தீபாவுக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி தந்தது.

அப்போது தான் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. யாரடி நீ மோகினி சீரியல் ஷூட்டிங்கில் தீபாவின் நண்பர் ஒருவரை அடித்து பிரச்சனை செய்ததாக பரபரப்பான தகவல் பரவியது. அவர் தீபாவை காதலிப்பதாக கத்தி கூச்சலிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதுகுறித்து பிரபல தனியார் செய்தி தளத்திற்கு பேட்டி அளித்த தீபாவும் அவரது கணவரும் குடும்ப நண்பர் தான் அப்படி நடந்து கொண்டதாக கூறினர். மேலும் அவருக்கு வார்னிங் கொடுத்து இருப்பதாகவும் மீண்டும் இதுபோல் நடந்து கொண்டால் போலீஸில் புகார் அளிக்க தயங்க மாட்டோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். அந்த பேட்டியிலும் தீபா கணவருடன் இல்லாமல் பிரிந்து இருப்பதாக கூறியிருந்தார்.

தீபாவின் இரண்டவது திருமணம்

இந்த நேரத்தில் தான் தீபாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்கானது. ஆனால் அதுகுறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை. இப்படி தீபாவின் பெயர் செய்தி தளங்களில் அடிக்கடி அடிப்பட, முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்ற வருடம் சுப்ரமணி என்பவரை தீபா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வீட்டில் மிகவும் எளிமையாக இவர்களின் திருமணம் நடைப்பெற்றது.

கண்ணன் எது பண்ணாலும் தப்பா மூர்த்தி? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அவசர முடிவு

இப்படி பல்வேறு சர்ச்சைகள் மத்தியில் வெள்ளித்திரையை விட்டு விலகி இருந்த தீபா தற்போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்பு சசிகுமார் படத்தில் நடித்துள்ளார். இவர் அந்த படத்தில் நடித்துள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Zee tamil