• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வாம்மா மின்னலு... 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் மின்னல் தீபா

வாம்மா மின்னலு... 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் மின்னல் தீபா

மின்னல் தீபா

மின்னல் தீபா

நடிகை தீபா 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்.

  • Share this:
    நடிகர் வடிவேலுவின் ‘வாம்மா மின்னலு’ காமெடியை யாராலும் மறக்க முடியாது. நடிகர் சரத் குமார் நடித்த மாயி படத்தில் தான் அந்த காமெடி இடம் பெற்றிருந்தது. வடிவேலுவுக்கு பெண் பார்க்க செல்லும் போது நடக்கும் சம்பவங்கள் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அந்தக் காட்சியில் மின்னலாக வந்து செல்பவர் தான் நடிகை தீபா.

    அதன் பிறகு சில படங்களில் நடித்த மின்னல் தீபா, பின்னர் சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை தீபாவிற்கு கடந்த 2013-ம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட விவாகரத்து பெற்றனர்.

    இதையடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சுப்பிரமணி என்பவருடன் தீபாவுக்கு இரண்டாவது திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் தீபா.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜவம்சம் படத்தில் அவர் நடித்துள்ளார். கதிர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, சுமித்ரா, விஜயகுமார், ராதா ரவி, நிரோஷா, மனோபாலா மற்றும் சிங்கம் புலி ஆகியோர் உடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: