• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சொந்த அக்காவுடன் மெட்டி ஒலி சீரியலில் நடித்த விஜி உமா மகேஸ்வரி

சொந்த அக்காவுடன் மெட்டி ஒலி சீரியலில் நடித்த விஜி உமா மகேஸ்வரி

வனஜா - விஜி

வனஜா - விஜி

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையிலும் இருந்திருக்கிறார் உமா.

  • Share this:
    சீரியல் நடிகை உமா மகேஸ்வரியின் திடீர் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. அவருடன் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, திருமுருகன், ரேகா, சேத்தன், நீலிமா ராணி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    உமாவின் உடன் பிறந்த சகோதரி வனஜாவும், ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்திருந்தார். கால்நடை மருத்துவரை திருமணம் செய்துக் கொண்ட உமா அதன் பின்னர் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார். தானாக நடிப்புக்கு முழுக்குப் போடவில்லை என முன்பு ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்த உமா, வாய்ப்புகள் வராததால் தான் நடிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    அதோடு தான், சீரியல் வாய்ப்பில்லாமல் இருந்தபோது, தனது கணவர் உற்சாகப்படுத்தி பிசினஸ் ஆரம்பிக்கச் சொன்னதாகவும், அதனால் 'ஶ்ரீ சாய் பொட்டிக்' எனும் பொட்டிக்கை ஆரம்பித்ததாகவும் கூறியிருந்தார். கடந்த 5,6 வருடங்களாக வீட்டிலிருந்தே அந்த பிஸினெஸை பார்த்துக் கொண்டார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையிலும் இருந்திருக்கிறார் உமா.




    இன்று காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: