• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மனோரமாவிடம் பாராட்டு வாங்கிய ’மெட்டி ஒலி’ விஜி உமா மகேஸ்வரி

மனோரமாவிடம் பாராட்டு வாங்கிய ’மெட்டி ஒலி’ விஜி உமா மகேஸ்வரி

மெட்டி ஒலி விஜி

மெட்டி ஒலி விஜி

ஒரு கட்டத்தில் சீரியல், சினிமா என பிஸியா இருந்த அவருக்கு, 'மெட்டி ஒலி' சீரியல் இன்னும் பெரிய ரீச்சை கொடுத்தது.

  • Share this:
    மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

    'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' போன்ற சீரியல்களிலும், 'ஈ பார்கவி நிலையம்' என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருந்தார் உமா. 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவர், திருமணத்துக்குப் பின்னர் சீரியலுக்கு முழுக்குப் போட்டார். இதற்கிடையில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான, 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

    உமா பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். அவரது அப்பா ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர். சின்னத்திரை நடிகை வனஜா (மெட்டி ஒலி லீலா), உமாவின் அக்கா தான். ஒருநாள் அக்காவின் சீரியல் ஷூட்டிங்குக்குப் போன உமாவுக்கு, எதிர்பாராத விதமாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படித்தான் விஜய் டி.வி-யின் 'காலேஜ் ரோடு' சீரியலில் நடித்தார் உமா. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது மனோரமாவுடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் உமாவின் சீரியலைப் பார்த்து விட்டு, ‘நீ நல்லா நடிக்கிற’ என மனோரமா பாரட்டியதை, பெரும் பாக்கியமாக தான் கருதுவதாக, நேர்க்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் உமா. அதைத் தொடர்ந்து 'அல்லி அர்ஜுனா', 'உன்னை நினைத்து' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    metti oli viji death, metti oli uma maheswari, metti oli uma maheswari biography, metti oli uma maheswari death, metti oli uma maheswari husband, metti oli uma maheswari instagram, metti oli uma maheswari sister, metti oli uma maheswari age, metti oli uma maheswari marriage, மெட்டி ஒலி விஜி, மெட்டி ஒலி உமா மகேஸ்வரி, மெட்டி ஒலி உமா மகேஸ்வரி மரணம், மெட்டி ஒலி உமா மகேஸ்வரி வயது, மெட்டி ஒலி உமா மகேஸ்வரி திடீர் மரணம்
    மெட்டி ஒலி விஜி


    ஒரு கட்டத்தில் சீரியல், சினிமா என பிஸியா இருந்த அவருக்கு, 'மெட்டி ஒலி' சீரியல் இன்னும் பெரிய ரீச்சை கொடுத்தது. கடைசியா, 'மஞ்சள் மகிமை' என்ற சீரியலில் நடித்த உமா, அதன் பிறகு திருமணம் செய்துக் கொண்டார். அவராக நடிப்பிலிருந்து விலகவில்லை, ஆனால் என்ன காரணமோ எந்த வாய்ப்பும் திருமணத்துக்குப் பிறகு வரவில்லை.




    இதனால் மீடியாவிலிருந்து ஒதுங்கியிருந்த உமா மகேஸ்வரி கடந்த பல மாதங்களால் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பின்னர் அவர் உயிரிழந்ததாகக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: