ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் சன் டிவியில் சீரியலை இயக்க போகும் ’மெட்டி ஒலி’ கோபி!

மீண்டும் சன் டிவியில் சீரியலை இயக்க போகும் ’மெட்டி ஒலி’ கோபி!

மெட்டி ஒலி கோபி

மெட்டி ஒலி கோபி

ஒரு சின்ன கேப் எடுத்துக் கொண்டவர் இப்போது மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் ‘மெட்டி ஒலி’ சீரியல் 2002 முதல் 2005 வரை மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பானது. இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கினார். இதில், இயக்குனர் திருமுருகன், டெல்லி குமார், போஸ் வெங்கட், காவேரி, காயத்ரி, சஞ்சீவி, வனஜா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.சின்னத்திரை சீரியலில் இதுவரை எந்த ஒரு சீரியலும் செய்யாத சாதனையை சன் டிவி மெட்டி ஒலி சீரியல் செய்து மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் 1000 எபிசோட்கள் ஒளிப்பரப்பப்பட்ட தொடரும் இதுவே ஆகும்.

ஆல்யாவை இவ்வளவு காதலிக்கிறாரா சஞ்சீவ்? 12 மணிக்கு மொத்த குடும்பத்தையும் வர வைத்தார்

இந்த பெருமைக்கெல்லாம் காரணம் இயக்குனர் திருமுருகன் தான். இவரை மெட்டி ஒலி கோபி என்றால் தான் பலருக்கும் தெரியும். மெட்டி ஒலி சீரியல் கொடுத்த ரீச் இவரை பெரிய திரை வரை அழைத்து சென்றது. முதல் படமும் சூப்பர் டூப்பர். எங்கே கோபி சீரியலை விட்டு படத்தில் கவனம் செலுத்தி விடுவாரோ என யோசித்த போது அடுத்தடுத்து சன் டிவியிலேயே நாதஸ்வரம், குல தெய்வம், கல்யாண வீடு என கலக்கினார். நாதஸ்வரம் தொடரின் ஆயிரமாவது எபிசோட் காரைக்குடியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்டு கின்னஸ் சாதனைப் பெற்றது. சன் டிவியில் 7.30 மணி என்றால் அது கோபின் நேரம் என பிரிக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?

ஒரு சின்ன கேப் எடுத்துக் கொண்டவர் இப்போது மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளார். சன் டிவியில் கோபி மீண்டும் புதிய சீரியலை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சீரியலுக்கான முதல்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆடிஷனில் கலந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)இந்த புது சீரியலிலும் திருமுருகன் நடிப்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. ஏற்கெனவே திருச்செல்வம் இயக்கத்தில் புதியதாக தொடங்கப்பட்ட எதிர் நீச்சல் சீரியல் சக்கை போடு போட்டி கொண்டிருக்கிறது. இப்போது திருமுருகனின் சீரியலும் சன் டிவியில் டெலிகாஸ்ட்  ஆகினால் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும் என்பதில் சந்தேகமே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial