விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், "நாம் இருவர் நமக்கு இருவர்". இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா ஹொல்லா, ராஷ்மி ஜெயராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் செந்தில். அதில் டாக்டரான அரவிந்த் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தாமரை என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மி ஜெயராஜ் நடித்திருந்தார்.
ஆனால் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு பெரும்பாலான சீரியல்களில் மாற்றம் நிகழ்ந்ததைப் போலவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் மாற்றம் செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து படப்பிடிப்புக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், ரக்ஷாவும், ராஷ்மியும் மாற்றப்பட்டனர். அதோடு கதையும் முற்றிலுமாக மாற்றப்பட்டு தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே நடிகை ராஷ்மி ஜெயராஜூக்கு சென்னையில் பிப்ரவரி 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஷ்மி ஜெயராஜ் நடித்துள்ள ‘ராஜபார்வ’ எனும் புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் டிவி தெரிவித்துள்ளது. இத்தொடரில் முனாஃப் ரஹ்மான் ஹீரோவாக நடிக்கிறார். இத்தொடரில் மெட்டி ஒலி நடிகை ரேவதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.