Home /News /entertainment /

முடிவுக்கு வந்த குஷ்புவின் ’மீரா’ சீரியல்.. கிளைமாக்ஸில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

முடிவுக்கு வந்த குஷ்புவின் ’மீரா’ சீரியல்.. கிளைமாக்ஸில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

மீரா சீரியல்

மீரா சீரியல்

வில்லி அஞ்சலியின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

    கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் குஷ்புவின் ‘மீரா’ சீரியல் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. சீரியலின் கிளைமாக்ஸூக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என அனைத்து துறைகளிலும் தனது வெற்றியை பதிவு செய்தவர் . சின்னத்திரையிலும் தனது கவனத்தை செலுத்தி வரும் குஷ்பு மீரா சீரியல் மூலம் எழுத்தாளராக தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார். இந்த சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வருகிறது. குஷ்புக்கு ஜோடியாக சுரேஷ் சந்திர மேனன் நடித்து வந்தார். பல காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலக தற்போது மீரா ரோலில் நடிக்கும் குஷ்புக்கு நடிகர் சுரேஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்து நடித்திருந்தனர்.

    சீரியலின் புரமோ தொடங்கி ஒன்லைன், திரைக்கதை பயணித்த விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது. இந்நிலையில்,
    வெறும் 62 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பான மீரா சீரியல் தற்போது முடிவுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். அந்த பதிவில் ” நல்ல விஷயம் ஆக இருந்தாலும் ஒரு நாள் முடிவுக்கு வந்தாக வேண்டும். தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனல் மற்றும் தன்னுடைய குழுவிற்கு நன்றி , மேலும் விரைவில் என்னுடைய குழுவுடன் உங்களை வேறு ஒரு ப்ராஜெக்ட்டில் சந்திக்கிறேன்” என கூறியிருக்கிறார்.



    இந்நிலையில் மீரா சீரியலின் கிளைமாக்ஸூக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.நாளையுடன் சீரியல் முடிவடைகிறது. கதைப்படி தற்போது அஞ்சலி, தானாகவே தாலி கட்டிக் கொண்டு கிருஷ்ணாவின் மனைவி என மீராவை ஏமாற்றி வருகிறார். அந்த உண்மை மீராவுக்கு தெரிய வருகிறது. கிருஷ்ணாவே அந்த உண்மையை சொல்லி விடுகிறார். வில்லி அஞ்சலியின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    இதுக் குறித்த புரமோவும் தற்போது வெளியாகியுள்ளது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்ற மீரா தொடர், கிளைமாக்ஸிலும் அதே பரபரப்புடன் முடிவடைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆதிராவின் திருமணம் நல்லப்படியாக நடப்பதுடன் சீரியல் முடிவடையும் என தெரிகிறது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Kushboo, Television, TV Serial

    அடுத்த செய்தி