வன்முறையை தூண்டும் பேச்சுகள்... மீரா மிதுனின் யூ-ட்யூப் சேனல் விரைவில் முடக்கம்

மீரா மிதுன்

வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ந்து மீரா மிதுன் பேசி வந்ததைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

 • Share this:
  கைதாகியிருக்கும் மீரா மிதுனின் யூ-ட்யூப் சேனலை முடக்கும்படி, யூ-ட்யூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

  பிக் பாஸ் தமிழ் நடிகை மீரா மிதுன், பட்டியல் சாதி சமூகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து அவர் மேல் பல புகார்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை போலீசாரால் ஆகஸ்ட் 14 அன்று கைது செய்யப்பட்டார் மீரா மிதுன்.

  7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் மீரா மிதுன் தற்போது சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது யூ-ட்யூப் சேனைலை முடக்கும்படி யூ-ட்யூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ந்து மீரா மிதுன் பேசி வந்ததைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த முடிவை எடுத்துள்ளனர். தவிர, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மீரா, நடிப்பை விட சர்ச்சைக் கருத்துகளால் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: