ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடிக்கடி இடத்தை மாற்றும் மீரா மிதுன்... கைது செய்யாத காவல்துறை மேல் நீதிபதி அதிருப்தி

அடிக்கடி இடத்தை மாற்றும் மீரா மிதுன்... கைது செய்யாத காவல்துறை மேல் நீதிபதி அதிருப்தி

மீரா மிதுன்

மீரா மிதுன்

இரண்டு மாதத்திற்கு மேல் வாரண்ட் நிலுவையில் இருப்பதாகவும் கைது செய்ய உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை எனவும் நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகை மீரா மிதுன், இடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால், பிடி வரண்ட் பிறப்பிக்க பட்ட அவரை கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக, காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

    பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜரகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

    பொன்னியின் செல்வன் படத்துக்கு ரஜினிகாந்தின் சாய்ஸ்!

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், அவர் பெங்களூருவில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மீரா மிதுனின் செல் போன் எண் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதாக காவல்துறை தரப்பு வழக்கறிஞர் எம். சுதாகர் தெரிவித்தார். இரண்டு மாதத்திற்கு மேல் வாரண்ட் நிலுவையில் இருப்பதாகவும் கைது செய்ய உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை எனவும் நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Meera Mithun