யார் ஜெயிக்கனும்?... யார் ஜெயிக்கக்கூடாது... மீரா மிதுன் அதிரடி

ஒரு பெரிய நடிகருடன் பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறேன் என்று மீரா மிதுன் கூறியுள்ளார்

news18
Updated: July 31, 2019, 2:47 PM IST
யார் ஜெயிக்கனும்?... யார் ஜெயிக்கக்கூடாது... மீரா மிதுன் அதிரடி
மீரா மிதுன்
news18
Updated: July 31, 2019, 2:47 PM IST
பிக்பாஸ் 3 சீசனில் சாண்டி தான் ஜெயிக்க வேண்டும் என்று மீரா மிதுன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மீரா மிதுன். கடந்த வாரத்தில் இந்த போட்டியில் இருந்து 4-வது ஆளாக வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் வெளியிலும் சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீராமிதுன் சேரனுடனான மோதல், பிக்பாஸ் வின்னர் குறித்தெல்லாம் பேசியுள்ளார்.

இது குறித்து மீரா மிதுன், ‘ சேரன் என்னை தவறாக தொட்டார் என்று நான் கூறவில்லை. அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டது வன்முறையாகத்தான் இருந்தது. சேரன் என்னிடம் குரலை உயர்த்திப் பேசினார் அது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது. அவர் பெரிய இயக்குநர் என்பதால் அவரை எதிர்த்து பேசாமல் இருந்தேன். அவர் என் மீது கோபமாகவே இருந்தார், அவருடை கோபம் வன்முறையாக மாறியது. இந்த விவகாரம் தொடர்பாக நான் தெளிவாக பேசியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


மேலும், இந்த பிக்பாஸ் சீசனில் சாண்டி தான் வெற்றி பெற வேண்டும். சாக்‌ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோர் வெற்றி பெறக் கூடாது. அவர்கள் என்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அது என்ன காயப்படுத்தவில்லை. பெண்ணாக இருந்தும் அவர்கள் என்னை புரிந்துகொள்ளாமல் இருந்தது தான் என்னைக் காயப்படுத்தியது என்று மீரா மிதுன் கூறியுள்ளார்.

மேலும், இனிமேல் மாடலிங் மற்றும் சினிமாவில் நேரத்தை செலவிடப்போகிறேன். ஒரு பெரிய நடிகருடன் பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறேன். அதனால் இனிமேல் பிஸியாகிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்

Also watch

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...