மனசாட்சிக்கு தெரியும்... சேரன் தான் எல்லாத்தையும் மாத்திட்டார் - குற்றம்சாட்டும் மீராமிதுன்

Web Desk | news18
Updated: July 30, 2019, 1:17 PM IST
மனசாட்சிக்கு தெரியும்... சேரன் தான் எல்லாத்தையும் மாத்திட்டார் - குற்றம்சாட்டும் மீராமிதுன்
Web Desk | news18
Updated: July 30, 2019, 1:17 PM IST
தன்னை தவறான நோக்கத்தில் இயக்குநர் சேரன் தொட்டார் என்று நான் கூறவில்லை. அவர்தான் அனைத்தையும் மாற்றிவிட்டார் என்று மீராமிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக அறிமுகமானவர் நடிகை மீராமிதுன். மாடலிங் துறையில் மோசடி செய்ததாக வெளியில் குற்றம் சாட்டப்படும் இவர், பிக்பாஸ் வீட்டையும் பரபரப்பாகவே வைத்திருந்தார். ஒரு டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று இவர் வைத்த குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது சேரன் உடைந்து கண்ணீர்வடித்தார். இதைக் கண்ட பிக்பாஸ் பார்வையாளர்கள் அவருக்கு எதிராக வாக்களித்து வெளியேற்றினர். வெளியேறும்போது கூட அவர் சேரன் மீது பழிசுமத்தினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கும் மீரா மிதுன்,  "சேரன் என்னை தவறாக தொட்டார் என்று நான் கூறவில்லை. அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டது வன்முறையாகத்தான் இருந்தது. ஆரம்பத்திலிருந்தே அவர் என்னிடம் குரல் உயர்த்தி பேசினார். அது எனக்கு பிடிக்கவில்லை. நான் நடத்தை சரியில்லை என்று சொல்லவே இல்லை.


அவர்தான் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் தப்பாக நடக்கவில்லை என்று அவர்தான் அதை மாற்றிவிட்டார். இதை அவர் தான் தவறாக திசைதிருப்பியுள்ளாரா என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். அவர் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சொல்பவர்கள் தான் அவருக்கு பிடிக்கும். தான் பெரிய இயக்குநர் என்ற மனநிலை அவருக்கு உண்டு. அவருக்கும் எனக்கும் என்ன நடந்தது என்று அவருடைய மனசாட்சிக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...