• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறிய மீரா ஜாஸ்மின் - வைரலாகும் படங்கள்!

உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறிய மீரா ஜாஸ்மின் - வைரலாகும் படங்கள்!

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின்

உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள அவரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  • Share this:
    நடிகை மீரா ஜாஸ்மின் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளது ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழில் சண்டக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் என இருமொழியிலும் முன்னணி நடிகயாக திகழ்ந்தார்.

    கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ’பாடம் ஒண்ணு: ஒரு விளப்பம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக கருதப்பட்டார். அதோடு கேரள மாநில விருது, தமிழக அரசின் மாநில விருது உள்ளிட்ட விருதுகளையும் தனது சிறந்த நடிப்பிற்காக வாங்கியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மீரா, அதன்பிறகு நடிப்பிற்கு முழுக்குப் போட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Film Flame (@film_flame)






    இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூடியிருந்தார் மீரா ஜாஸ்மின். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள அவரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதோடு கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். சத்யன் அந்திக்காடு இயக்கும் அந்தப் படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: