ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றியின் வீட்டிலிருந்து சக்தி கோபமாக வெளியே செல்ல, திடியன் நான் உடன் வருகிறேன் என்று சொல்ல, யாரும் வரவேண்டாம் என்று சக்தி வெளியே போய் விடுகிறாள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த ரங்கநாயகி நான் கோபப்பட வேண்டிய இடத்தில் இவள் கோபப்படுகிறாள் என்று கூறுகிறாள். அடுத்து ஜீ தமிழ் சரிகமப பாடகர் மீனாட்சி மெஸுக்கு வருகிறார். அவர் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற பாடலை பாட அந்த பாடல் எங்கள் வாழ்வில் நடப்பதை போல் இருக்கின்றது என்று யமுனா கூறி பாடகரை பாராட்டுகிறாள்.
அடுத்து யமுனா, துர்கா, மீனாட்சி பேசிக் கொண்டிருக்க சக்தி அங்கே வருகிறாள். நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க மீனாட்சி சக்தியால், ஏற்பட்ட அவமானத்தை கூறுகிறாள். அடுத்த பெண்களுக்கு எப்படி திருமணம் செய்வது என்று கூறி வருத்தப்படுகிறாள்.
சக்தியை அம்மா வீட்டுக்குள் அழைக்காததால் சக்தி அவர்களின் வீட்டுக்கு வெளியே உள்ள கல் கோவிலுக்கு சென்று சாமியிடம் புலம்புகிறாள். பிறகு சக்தி, மீனாட்சி மெஸ்சிற்கு சாதாரண வாடிக்கையாளர் போல் வர மீனாட்சி பரிமாறாமல் கோபத்தில் இருக்க, சகோதரிகள் பரிமாறுகின்றனர்.
அம்மாவின் கைப்பக்குவம் சாப்பாடுருசியாக இருப்பதாக அம்மாவை பாராட்டி விட்டு சக்தி அங்கிருந்து புறப்பட்டு போகிறாள். வெற்றியின் வீட்டில் செல்வ முருகன் மருந்தை எடுக்கப் போகும்போது வீல்சேரில் இருந்து தவறி கீழே விழ, சக்தி அவருக்கு உதவி செய்து மருந்து எடுத்துக் கொடுத்து உதவ இதை பார்த்த ரங்கநாயகி சக்தியை திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Also read... குலக்கல்வியை எதிரொலித்த எம்ஜிஆரின் மதுரை வீரன் படப்பாடல்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv