• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீனாவை மூர்த்தியிடம் போட்டு கொடுத்த முல்லை.. இதே வேலையா போச்சு!

மீனாவை மூர்த்தியிடம் போட்டு கொடுத்த முல்லை.. இதே வேலையா போச்சு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

மீனா தன்னை அறியாமல் கண்ணனிடம் பேசியதை உலறி விடுகிறார். முல்லை உடனே இதை மூர்த்தியிடம் போட்டு கொடுக்கிறார்

  • Share this:
    மீனாவை மூர்த்தியிடம் போட்டு கொடுக்கிறார் முல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடின் புரமோ வெளியாகியுள்ளது.

    தமிழ் சீரியல்களில் டாப் 3ல் இருக்கும் சீரியல் எதுவென்றால் அது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணன் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டதில் இருந்தே, பாசமலர்களாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புகைச்சல்கள் உருவாகத் தொடங்கியது. அம்மா இறந்ததை கண்ணனிடம் சொல்லாத குடும்பத்தினர், அவர் திரும்பி வருவதற்குள் அடக்கம் செய்துவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீது கண்ணன் அதிருப்தியில் இருந்தார்.

    மூர்த்தின் கோபத்தை சரிசெய்ய கண்ணன் எதிர் வீட்டில் குடி வர இந்த நேரம் பார்த்து தனத்திற்கு பிரசவ வலி வர, முதள் ஆளாக ஓடிச் சென்று கண்ணன் உதவுகிறார். தனத்திற்கு குழந்தை பிறந்த பிறகு பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் என நினைத்த நிலையில் மற்றொரு பிரச்சனை தலை தூக்குகிறது. அதாவது, கண்ணன் மீது மீனாவின் அப்பா திருட்டு பட்டம் கட்டுகிறார். கடையில் இருந்து ரூ. 15,000 ரொக்கத்தை கண்ணனும் ஐஸ்வர்யாவும் திருடி விட்டதாக பழி போடுகிறார். ஆனால் திருடியது அவர்களை இல்லை.

    இந்த விஷயம் கதிருக்கு தெரிய வர, தம்பிக்கு ரூ. 15000 கடை பணத்தை கொடுத்து கண்ணனுக்கு உதவுகிறார் கதி.ர் பணத்தை மீனாவின் அப்பாவிடம் கொடுத்து விட்ட கண்ணன், இனிமேல் கடைக்கு வேலை செய்ய போவதில்லை எனவும் கூறி விட்டார். இந்நிலையில் தான் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கடைக்கு வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பதை நோட் செய்த, மீனா கண்ணனிடம் பேச்சு கொடுத்து ஏன் கடைக்கு போகவில்லை என கேட்கிறார்.



    ஐஸ்வர்யா எல்லா உண்மைகளையும் சொல்ல வர, கண்ணன் வேண்டாம் என நிறுத்தி விடுகிறார். இதைப்பற்றி தனமும் கவலையுடன் மூர்த்தியிடம் சொல்கிறார். முல்லை அக்கம் பக்கத்தினர் பற்றி நமக்கு என்ன ? என்று கருத்து சொல்ல, மீனா தன்னை அறியாமல் கண்ணனிடம் பேசியதை உலறி விடுகிறார். முல்லை உடனே இதை மூர்த்தியிடம் போட்டு கொடுக்கிறார். இதுக் குறித்த புரமோ தான் வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: