Home /News /entertainment /

மகன் முகிலை நேரில் சந்திக்கும் மீனா.! அம்பலமாகும் வாத்தியின் ரகசிய கல்யாணம்.. பரபரப்பான ப்ரமோ!

மகன் முகிலை நேரில் சந்திக்கும் மீனா.! அம்பலமாகும் வாத்தியின் ரகசிய கல்யாணம்.. பரபரப்பான ப்ரமோ!

அபியும் நானும்

அபியும் நானும்

தற்போதைய ப்ரமோவில், வீட்டை விட்டு சென்ற தாயின் நினைவாகவே சோகத்துடன் பள்ளியில் சாப்பிடும் மாணவர்கள் மத்தியில் உட்கார்ந்திருக்கும் முகில் முன் வருகிறார் மீனா - பரபரப்பான ப்ரமோ!

பொழுதுபோக்கை மையமாக கொண்ட பிரபல டிவி சேனல்கள் எல்லாவற்றிலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைகள் மற்றும் சுவாரசியமான காட்சிகளுடன் திறமையான நடிகர்களை கொண்டு ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிக்கின்றன.

அவை சூப்பர் ஹிட் சீரியலாகவும் மாறி சேனல்களின் TRP ரேட்டிங்கை அதிகரிக்கின்றன. பல சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அதிக ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் சன் மற்றும் ஸ்டார் விஜய் ஆகிய 2 சேனல்களின் சீரியல்களாக தான் இருக்கின்றன. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் வரை அனைத்து தரப்பையும் கவரும் வகையில் காலை முதல் இரவு வரை சன் டிவி-யில் சீரியல்கள் அணிவகுத்து நிற்கின்றன.

பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் அபியும் நானும். இதில் சிறுமி ரியா மனோஜ், அபி என்ற முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் அரவிந்த் ஆகாஷ் மற்றும் நடிகை வித்யா மோகன், பழம்பெரும் சினிமா நடிகை லதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியாலில் லேட்டஸ்ட் ப்ரமோவை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து உள்ளது சன் டிவி. அபி-யை இத்தனை நாள் மாறுவேடத்தில் வீட்டில் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்த மீனாவின் (வித்யா மோகன்) கணவர் டாக்டர் சிவா ( அரவிந்த் ஆகாஷ்) மற்றும் மாமியார் ராஜேஸ்வரி (லதா) சிறுமியை வீட்டை விட்டு அனுப்ப வற்புறுத்துகின்றனர். ஆனால் மறுக்கும் மீனா, அபி என் குழந்தை என்று பிடிவாதம் பிடிக்க பின்னர் நடந்த களேபரத்தில் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள் மீனா. தனது தாய் மீன்வின் நினைவால் வாடுகிறான் சிவா - மீனா தம்பதியரின் மகனான சிறுவன் முகில்.

இந்நிலையில் தற்போதைய ப்ரமோவில், வீட்டை விட்டு சென்ற தாயின் நினைவாகவே சோகத்துடன் பள்ளியில் சாப்பிடும் மாணவர்கள் மத்தியில் உட்கார்ந்திருக்கும் முகில் முன் வருகிறார் மீனா. ஆனால் முகிலோ அதை நம்ப மறுத்து "போங்கம்மா நீங்க நெஜமா வரவே மாட்டேங்குறீங்க" என்னு சோகத்துடன் கூறி கன்னத்தில் கை வைத்து கீழே குனிந்து கொள்கிறான். அவன் அருகே கையில் சிறிய பையுடன் செல்லும் மீனா "முகில் நான் நெஜமா தான் வந்துருக்கேன்" என்று கூறி தோளை தொட்டு தூக்குகிறார். இதனை தொடர்ந்து அம்மா நேரில் வந்திருப்பது நிஜம் என்று அறிந்து உற்சாகத்தில் துள்ளி குதித்து எழும் முகில் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறான். தாய் - மகன் இருவரும் மாறி மாறி பாச மழையில் நனைகிறார்கள்.டாக்டர் சிவாவின் தம்பியான ரகுவின் காதலி மற்றும் மனைவி தான் ஆட்டோ ஓட்டும் பெண் வாத்தி (ரம்யா கவுடா). ரகு குடிபோதையில் கழுத்தில் தாலி கட்டியதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளார். இவரது தங்கைக்கு ராகுவை கல்யாணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது கழுத்தில் மறைத்து வைத்திருக்கும் தாலியை அவளது தங்கை பார்த்து அதிர்ச்சியாவது போல இந்த ப்ரமாவில் சீன்கள் உள்ளது. அதுமட்டுமின்றி "என்ன டி உன் கழுத்தில் தாலி இருக்கு" என்று சகோதரியை பார்த்து கோபமுடன் கேட்பதோடு இந்த ப்ரமோ முடிகிறது.
Published by:Elakiya J
First published:

Tags: Entertainment, Sun Nxt

அடுத்த செய்தி