• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம்!

ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

வீட்டில் இருக்கும் தனத்தின் அம்மாவும், கஸ்தூரி அத்தாச்சியும் இதை பெரியதாகுகிறார்கள்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் குடும்பம் பிரிய போவது மூர்த்திக்கே தெரியாமல் ஒவ்வொரு நாளும் பிரச்சனையில் சென்று கொண்டிருக்கிறது.

    தனத்திற்கு குழந்தை பிறந்த பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மகிழ்ச்சியாக செல்லும் எனும் எதிர்பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தான். காரணம், முல்லை மற்றும் மீனாவின் நடவடிக்கையில் வந்த மாற்றம் தான். தனத்தின் குழந்தை மீது வீட்டில் இருக்கும் அனைவரும் காட்டும் அதிகமான பாசம், மீனாவுக்கு பொறாமையை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே கயல், கயல் என அனைவரும் அதிகமான பாசத்தை காட்ட, இப்போது திடீரென்று தனம் குழந்தையை அனைவரும் கொஞ்சுவது மீனாவுக்கு ஒருவிதமான பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை வெடிக்கிறது.

    மறுபக்கம் முல்லையின் மாற்றமும் காரணம்.கதிருடன் அளவுக்கு அதிகமாக நேரத்தை செலவிடும் முல்லை, கடை விஷயத்திலும் அதிகம் தலையிடுவது பிரச்சனையில் போய் முடிகிறது.இன்றைய எபிசோடில் உடம்பு சரியில்லாத மீனா கயல் பாப்பாவை தனத்திடம் கொடுத்து விட்டு ரெஸ்ட் எடுக்கிறார். அந்த நெரம் பார்த்து தனம், கைக்குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே போக, கயல் பாப்பா தனியாக அழுது கொண்டிருக்கிறாள்.குழந்தை சத்தத்தை கேட்டு வெளியே ஓடி வரும் மீனா, குழந்தையை எல்லோரும் தனியே விட்டு விட்டதாக எண்ணி கோபப்படுகிறாள்.

    அடுத்தது, புதியதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை கட்டும் இடத்தில் ஏ.டி.எம் வைக்க ஒருவர் வந்து கதிரிடம் பேசுகிறார். அதிகமான அட்வான்ஸ், வாடகை கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு கதிரும், முல்லையும் ஓகே சொல்லிவிடுகிறார்கள். இந்த பக்கம் மூர்த்தி, அந்த இடத்தில் வேறு ஒருவருக்கு கடை கட்டி வாடகை தர வாக்கு கொடுக்கிறார். இதனால் கதிர் சொல்லும் ஏ.டி.எம் மிஷின் வைக்கும் ஐடியாவுக்கு மூர்த்தி வேண்டாம் என்கிறார். இதனால் கதிருக்கும் முல்லைக்கும் முகம் மாறுகிறது. மூர்த்தி வேண்டாம் என்று பேச்சை முடிக்க கதிர் முகம் மாறுகிறது. இதனால் முல்லைக்கும் கோபம் வருகிறது. இதை தனம் கவனிக்கிறார்.

    முதல் நாளே கன்டெண்ட் நாயகன் அபிஷேக் இல்லாமல் தவிக்கும் பிக் பாஸ் வீடு!

    இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மீனா, முல்லையின் பேச்சு நடத்தையில் மாற்றம் வர, வீட்டில் இருக்கும் தனத்தின் அம்மாவும், கஸ்தூரி அத்தாச்சியும் இதை பெரியதாகுகிறார்கள். லட்சுமி அம்மாவின் மறைவுக்கு பிறகு ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்தால் அதற்கு காரணம் இவர்கள் தான். ஆனால் இது எதுவுமே தெரியாமல் மூர்த்தியும் தனமும் கயல் பாப்பாவுக்கு பிறந்த நாள் கொண்டா திட்டமிடுவது, மொட்டை அடிக்க வேண்டும் என வேறு உலகில் இருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: