Home /News /entertainment /

எல்லை மீறும் மீனாவின் வார்த்தைகள்... ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

எல்லை மீறும் மீனாவின் வார்த்தைகள்... ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணனும் - ஐஸ்வர்யாவும் மீனாவின் பேச்சை பெருசுப்படுத்தாமல் எப்படியாவது படிப்பை முடிக்க வேண்டும் என முடிவு எடுக்கின்றனர்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் பேச்சால், மொத்த குடும்பமும் ஐஸ்வர்யா - கண்ணனுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப சண்டை நாளுக்கு நாள் பெருசாகி கொண்டே செல்கிறது. இத்தனை நாள் வரை கடைசி மருமகள் ஐஸ்வர்யா தான் வீட்டுக்கு வந்த வில்லி என நினைத்து கொண்டிருக்க கடைசியில் மீனா வில்லியாக மாறி விட்டார். ஐஸ்வர்யா மீது இரக்கப்பட்டு இப்போது மொத்த குடும்பமும் அவருக்கு சப்போர்ட் செய்யும் நிலை மாறிவிட்டது. இதற்கு காரணம், மீனாவின் பொறாமை குணம் தான். கண்ணன் - ஐஸ்வர்யா எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருப்பது, காலேஜ் போய் படிப்பது, அவருக்கு தனம் பாக்கெட் மணி கொடுப்பது என வீட்டில் நடந்த பல நிகழ்வுகள் மீனாவுக்கு எரிச்சல் வர செய்ய திடீரென்று மீனா வில்லி அவதாரம் எடுத்து விட்டார்.

    இதனால் தனம், மீனாவை அழைத்து கண்டிக்கிறார். ஆனாலும் மீனா மாறுவதாக தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் ஐஸ்வர்யா பார்ட் டைமில் வேலைக்கு செல்ல மூர்த்தியிடம் கேட்கிறார். மீனா குத்தி காட்டி பேசுவது ஐஸ்வர்யாவுக்கு மன வருத்தத்தை தர, அதைப்பற்றி கண்னனிடமும் பேசுகிறார். இருவரும் சேர்ந்து பார்ட் டைம் வேலைக்கு செல்ல முடிவு எடுக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, முல்லை பிரச்சனை வீட்டில் மற்றொரு கவலையை அளிக்கிறது.

    இதையும் படிங்க.. என்ன தாமரை இதெல்லாம்? ஷாக்கான ரசிகர்கள்! வைரலாகும் தாமரை செல்வியின் டான்ஸ் வீடியோ

    முல்லை - கதிர் ஜோடிக்கு 4 வ்ருடம் ஆகியும் குழந்தை பிறக்காமல் இருப்பது பல்வேறு பிரச்சனையை வீட்டுக்குள் வர வைக்கிறது. முல்லையும் இதனால் தினமும் அழுது கொண்டே இருக்கிறார். அதுமட்டுமில்லை, தனம், முல்லையை ஹாஸ்பிட்டல் போயிட்டு வரும்படி அறிவுருத்துகிறார். வீட்டில் இவ்வளவு பிரச்சனை அரங்கேறி வருவதால் கண்ணனும் - ஐஸ்வர்யாவும் மீனாவின் பேச்சை பெருசுப்படுத்தாமல் எப்படியாவது படிப்பை முடிக்க வேண்டும் என முடிவு எடுக்கின்றனர்.

    வேலைக்கு செல்ல முடிவு எடுத்து, பேப்பரில் வேலை வாய்ப்பு செய்திகளை தேடுகின்றனர். ஒருவேலைக்கு போய் மீனாவின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்பதே அவர்களின் இப்போதைய முடிவு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, Vijay tv

    அடுத்த செய்தி