• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆசையாக இருந்த மீனாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்த தனம்!

ஆசையாக இருந்த மீனாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்த தனம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஜீவாவுடன் சந்தோஷமாக தனியாக செல்ல ஆசைப்பட்ட மீனாவுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம்.

  • Share this:
    சென்னை செல்ல ஆசையாக இருந்த மீனாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தருகிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில மாதங்களாக கதையோட்டம் மொத்தமாக கண்ணன் ஐஸ்வர்யாவை நோக்கியே இருந்தது. அண்ணன்களின் வாக்கே தெய்வ வாக்கு என வாழ்ந்து வந்த கண்ணன் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு மாறிவிட்டார். இந்த காதல் திருமணத்தால் லட்சுமி அம்மா இறந்து போக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மூர்த்தி , கண்ணன் மீது கோபப்பட்டு அவரை விலக்கி வைக்கிறார். இந்த விரிசலை பெரிதுப்படுத்த கஸ்தூரி அத்தாச்சி கண்ணன் - ஐஸ்வர்யாவை மூர்த்தி வீட்டுக்கு எதிரே குடி வைக்கிறார். ஆனால் கண்ணன் எதிர் வீட்டுக்கு வந்த பின்பு இங்கு நடப்பதோ வேறு. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் குடும்பத்துடன் நெருக்கம் ஆகிறார்கள்.

    இந்த நேரத்தில் தான் தனத்திற்கு பிரசவ வலி வர அந்த நேரம் கண்ணன் சரியான நேரத்திற்கு உதவ, சீரியலில் சுவாரசியம் கூடியது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சண்டைக்கு மேல் சண்டை. காரணம், தனத்தின் குழந்தை மீது தான் மொத்த கவனமும் இருப்பதாக கயலை மறந்து விட்டதாக மீனா அடிக்கடி கோபித்து கொள்கிறார். இந்த சண்டை தனம் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவில் பெருசாக வெடிக்க, தனத்தின் அம்மா கோபித்து கொண்டு கிளம்பி விட்டார். மீனாவின் மொத்த அழுகைக்கும் கண்னன் தான் காரணம் என மீனாவின் அப்பா கண்ணன் மீது கோபத்தை காட்டுகிறார். அதுமட்டுமில்லை கண்ணன் - ஐஸ்வர்யா மீது திருட்டு பழியும் கட்டுகிறார்.

    இந்த விஷயம் வீட்டில் கதிர் - முல்லைக்கு தவிர யாருக்கும் தெரியாது. கதையோட்டம் இப்படி இருக்க, மீனா அப்பா, மீனாவும் ஜீவாவும் தனியாக 2 நாட்கள் சென்னையை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்கிறார். கயல் பாப்பாவுக்கு நட்சத்திர பிறந்த நாளை கொண்டாட சென்னைக்கு போக சொல்கிறார். மீனாவும் ஆசை ஆசையாக சென்னைக்கு தனியாக ஜீவாவுடன் செல்ல காத்துக் கொண்டிருக்க, இரவு வீட்டுக்கு வரும் மூர்த்தி மற்றொரு அதிர்ச்சியை சொல்கிறார். மீனாவால் கயல் பாப்பாவை தனியாக பார்த்துக் கொள்ள முடியாது எனபதால் எல்லோரும் சென்னைக்கு போகலாம் என்கிறார். இந்த விஷயம் மீனாவுக்கு இடி போல் தெரிகிறது. ஜீவாவுடன் சந்தோஷமாக தனியாக செல்ல ஆசைப்பட்ட மீனாவுக்கு கடைசியில் ஏமாற்றம் தான். அதே நேரம் முல்லை சென்னை போவதை நினைத்து சந்தோஷப்படுகிறார்.

    கோதை அம்மாவுக்கு ஏத்த மருமகள்.. டாப் கியரில் செல்லும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்!

    மீனாவுக்கு அழுகையும் கோபமும் வர, அதை ஜீவாவிடம் காட்டுகிறார். பொழுது விடிகிறது.மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் சென்னைக்கு கிளம்புகிறார்கள். ஆனால் மீனா முகத்தில் மட்டும் துளி கூட சந்தோஷமில்லை. அந்த நேரம் பார்த்து மீனா அப்பா வீட்டுக்கு வர அவரும் மீனாவின் நிலையை பார்த்து தலையில் அடித்து கொள்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: