Home /News /entertainment /

மீனா அப்பாவா இப்படி? கடைசி நேரத்தில் கதிருக்கு செய்த உதவி!

மீனா அப்பாவா இப்படி? கடைசி நேரத்தில் கதிருக்கு செய்த உதவி!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் மனைவிக்கு  துணையாக நிற்க கடைசியாக ஒருவழியாக முல்லை வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய  எபிசோடில், முல்லை,  கதிருக்கு தெரியாமல் செய்த வேண்டுதலை பற்றி மீனாவின் அப்பா  கதிரிடம் சொல்லி அவரை  கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில வாரங்களாக கதிர் - முல்லையின் குழந்தை விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த பின்பு, புது வீடு கட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக முல்லையின் மருத்துவ செலவில் கவனம் செலுத்தலாம் என்கிறார் மூர்த்தி. மொத்த குடும்பமும் அதற்கு கட்டுப்படுகிறது.  ஆனால் அதில் மீனாவுக்கு விருப்பமில்லை, வீடு கட்டுவது தான் முக்கியம் என்கிறார் மீனா.

    பீஸ்ட் படம் பார்க்க வந்த விஜய் ரசிகரின் மூக்கு வாயை உடைத்த தியேட்டர் ஊழியர்கள் ஏன்.?

    இப்படி இருக்கையில் மொத்த குடும்பத்திற்கும் வீண் செலவு வேண்டாம் என நினைத்த முல்லை, வேண்டுதலை நிறைவேற்றி அதன் மூலம் கடவுள் ஆசீர்வாதம் பெறலாம் என்கிறார். அந்த கோயிலில் வேண்டுதலை செய்தால், அனைத்து குறைகளும் தீரும் என கஸ்தூரி அத்தாச்சி சொல்ல, முல்லை,  கதிரிடம் பொய் சொல்லிவிட்டு அந்த வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு போகிறார். இவர்களை மீனாவின் அப்பா ஜனார்தன் பார்த்து விடுகிறார். அதான் ஹலைட்

    வெறித்தனமான விஜய் ஃபேன்ஸ் போல... பீஸ்ட் படத்திற்காக பிரபல சின்னத்திரை ஜோடி செய்த காரியம்!

    பார்த்தவர், நேராக சென்று கதிரிடம் சொல்லிவிடுகிறார். மனசு தாங்க முடியாமல் கதிர், புதுக்கோட்டையில் இருக்கும் கோயிலுக்கு கிளம்புகிறார். அங்கே போய் பார்த்தால் முல்லை, முடியாமல் ரத்தம் வடிய வடிய வேண்டுதலை செய்ய கதிர் கண்ணீர் வடிக்கிறர். முடியாமல் முல்லை தனது வேண்டுதலை செய்துக் கொண்டிருக்கிறார். கதிருக்கு,  முல்லையின் இந்த  நிலைமை, குழந்தைக்காக அவர் ஏங்குவதை பார்த்து  அழுகையை அடக்க முடியவில்லை. ஆனாலும் கதிர் மனைவிக்கு  துணையாக நிற்க கடைசியாக ஒருவழியாக முல்லை வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

    எப்போதுமே, மூர்த்தி குடும்பத்திற்கு தீங்கு செய்ய நினைக்கும் மீனாவின் அப்பா, முதன்முறையாக் செய்த உதவியால் முல்லை கதிர் உதவியுடன் வேண்டுதலை நிறைவேற்ற காரணமாக அமைந்து விடுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி