Home /News /entertainment /

மொத்த குடும்பமும் ஐஸ்வர்யா பக்கம்.. தனித்து விடப்பட்ட மீனா!

மொத்த குடும்பமும் ஐஸ்வர்யா பக்கம்.. தனித்து விடப்பட்ட மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores மீனா செய்யும் சின்ன தப்பு மிகப் பெரிய சண்டைக்கு காரணமாகி விடுகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மொத்த குடும்பமும் ஐஸ்வர்யா பக்கம் நிற்க, மீனாவின் நிலைமையோ மோசமாகுகிறது. அமைதியாக இருந்த வீட்டில் ஐஸ்வர்யா - மீனாவால் தான் சண்டை நடப்பதாக தனம் அண்ணி புலம்பி தீர்க்கிறார்.

    அச்சு அலசாக கூட்டு குடும்பத்தின் வாழ்வியலை சொல்லும் தொடராக ஒளிப்பரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். அதிலும் குறிப்பாக இளம் இயக்குனர் தமிழ் குடும்பங்களில் அரங்கேறும் சாப்பாடு பிரச்சனை,குழந்தைகள் சண்டை, அண்ணன் - அண்ணி பாசம் இவற்றை அடிப்படையாக கொண்டு யதார்த்தமான குடும்ப சீரியலை ரசிகர்களுக்கு வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் வரிசையில் சென்று கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

    இதையும் படிங்க.. எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.. அபி டெய்லர் சீரியல் ரேஷ்மா சொன்ன விஷயம்!

    இதில் அண்ணனாக அண்ணியாக தம்பிகளாக நடிக்கும், ஒவ்வொருவரையும் தமிழ் ரசிகர்கள் நிஜ குடும்பங்களாகவே பார்க்கின்றனர் . போன வாரம் மொத்த குடும்பமும் கடை திறப்பில் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் அதற்குள் தற்போது குடும்பத்தில் சண்டை வெடித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஐஸ்வர்யாவுக்கு மீனாவுக்கும் செட் ஆகாது. இந்த நேரத்தில் ஐஸ்வர்யா கடைக்கு போய் கதிர், ஜீவாவுக்கு உதவியாக இருக்கிறார். இதனால் மொத்த குடும்பமும் ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளுகின்றனர். அதுமட்டுமில்லை ஐஸ்வர்யாவை நினைத்து தனம், மூர்த்தி பெருமை படுகின்றனர். இதனால் கண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். ஏற்கெனவே சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்ததால் கிடைத்த அனுபவித்தினால் ஐஸ்வர்யாவுக்கு இந்த வேலை ஈஸியாக வருகிறது. ஆனால் இது மீனாவுக்கு பிடிக்கவில்லை.

    இதையும் படிங்க.. பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணமா? அடுத்த ட்விஸ்டுக்கு தயாரான பாரதி கண்ணம்மா தொடர்!

    மறுநாள் தூக்கக் கலகத்தில் மீனா செய்யும் சின்ன தப்பு மிகப் பெரிய சண்டைக்கு காரணமாகி விடுகிறது. ஏற்கெனவே ஐஸ்வர்யா கோலம் போட்டு வைக்க, அதை கவனிக்காமல் மீனா தண்ணீர் ஊற்றி விடுகிறார். பிரச்சனை வர போகும் பயத்தில் வேறு ஒரு கோலத்தை போட்டு வைக்கிறார். இதை கவனித்த ஐஸ்வர்யா, மீனாவிடம் சண்டைக்கு போக, மீனா பதிலுக்கு பதில் பேச சண்டை வெடிக்கிறது. இதில் முல்லை, தனம் இருவரும் ஐஸர்யாவுக்கு சப்போர்ட்டாக பேச மீனாவுக்கு கோபம் வருகிறது.

    இப்படியே சண்டை பெருசாக, தனம் அண்ணி இருவரையும் பயங்கரமாக திட்டி விடுகிறார். நடுவில் மாட்டிக் கொண்டு முல்லையும் திட்டு வாங்குகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி