உழைப்பாளர் தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படும் மே தினம் இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமையில் வந்து விட்டதே, வார நாட்களில் வந்து இருந்தால் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைத்து இருக்குமே என்கிற வருத்தத்தில் நீங்கள் இருப்பின் - உங்களுக்கான ஒரு குட் நியூஸ் தான் இது!
மே தினத்தை சிறப்பிக்கும் நோக்கத்தின் கீழ் குறிப்பிட்ட நாளில், எந்தெந்த தமிழ் டிவி சேனல்கள் என்னென்ன சிறப்பு திரைப்படங்களை, எந்தெந்த நேரத்தில் ஒளிபரப்பவுள்ளது என்கிற பட்டியலே - உங்களுக்கான அந்த குட் நியூஸ்; எக்ஸ்டரா லீவு கிடைக்காது புண்பட்ட நெஞ்சை, புது படங்கள் பார்த்து ஆற்றிக்கொள்ளுங்கள்!
மே தினத்தை முன்னிட்டு சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் மற்றும் ஜீ தமிழ் ஆகியவைகள் தத்தம் சேனல்களில் ஒளிபரப்படவுள்ள சிறப்பு திரைப்படங்களை அறிவித்துள்ளன. அதன்படி சன் டிவியில், சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் பெரிய அளவிலான வசூலை குவிக்கவில்லை; எனவே தான் தியேட்டர்களில் வெளியான வேகத்தில் டிவிக்கு வந்து விட்டது. சன் டிவியில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
also read : K.G.F: Chapter 2 ராக்கி பாயின் அம்மா தமிழ் சீரியல் நடிகையாம்! உங்களுக்கு தெரியுமா?
விஜய் டிவியில், சிம்பு நடிப்பில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய 'மாநாடு' திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது. படம் 'டிராப்' செய்யப்பட்டது என்கிற அறிவிப்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் வசூல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு வரை பல சிக்கல்களுக்கு பிறகு வெளியான இத்திரைப்படம் எஸ்டிஆர்-இன் உண்மையான 'கம்பேக்' என்றால் அது மிகையாகாது. டைம் லூப் கான்செப்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் விஜய் டிவியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
என்னப்பா..? மே தினத்தன்று அஜித் குமார் படம் எதுவும் இல்லையா? என்று நீங்கள் கேட்கும் முன்பே சொல்லி விடுகிறோம். அந்த பொறுப்பை ஜீ தமிழ் சேனல் கையில் எடுத்துகொண்டுள்ளது. "இப்போ வருமோ.. அப்போ வருமோ.. எப்போ தான் வருமோ?" என்று ரசிகர்களின் பொறுமையை சோதித்து பின் வெளியான 'வலிமை' திரைப்படம் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் சேனலின் மே தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது. இது ஏற்கனவே ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி விட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
also read : பிரசவத்திற்கு பிறகு கவர்ச்சியாக இல்லை... ஆனால் அழகாக இருக்கும்!
கடைசியாக, கலர்ஸ் தமிழ் சேனலில் மே தின சிறப்பு திரைப்படமாக சமுத்திரகனி, இனியா, திலீபன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான 'ரைட்டர்' மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.