• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழக வரலாற்றின் கதைகளை சொல்லும் மகாபலிபுரம் - "மாஸ்டர் செஃப்" ஜட்ஜ் ஆர்த்தி ஷேர் செய்த வீடியோ!

தமிழக வரலாற்றின் கதைகளை சொல்லும் மகாபலிபுரம் - "மாஸ்டர் செஃப்" ஜட்ஜ் ஆர்த்தி ஷேர் செய்த வீடியோ!

தமிழ் மாஸ்டர் செஃப் ஷோவில் செஃப் ஹரிஷ் ராவ், செஃப் ஆர்த்தி சம்பத், செஃப் கெளஷிக் எஸ் ஆகிய 3 ஜட்ஜ்கள் பங்கு பெற்றுள்ளனர். இதில் செஃப் ஆர்த்தி சம்பத் சமீபத்தில் மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரிக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்துள்ளார்.

  • Share this:
தமிழக்தில் பிரபலமாக உள்ள முன்னணி சேனல்கள் ரசிகர்களை கவருவதற்காக போட்டி போட்டு கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானாலும் ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த குக்கிங் ரியாலிட்டி ஷோவாக இருக்கும் குக் வித் கோமாளிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பல சேனல்கள் வியந்தன. எனவே எதையுமே பிரமாண்டமாக செய்யும் சன் டிவி, விஜய் டிவி-க்கு போட்டியாக குக்கிங் ஷோவை வித்தியாசமாக ஒளிபரப்ப முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் "மாஸ்டர் செஃப்" குக்கிங் நிகழ்ச்சியை விஜய் டிவி-க்கு போட்டியாக களமிறக்க முடிவு செய்தது சன் நெட்ஒர்க். இந்நிகழ்ச்சியின் உரிமை ஃபாக்ஸ் நிறுவனத்திடம் இருந்த நிலையில் இந்தியாவில் சன் குரூப்பின் சன் டிவி மற்றும் ஜெமினி டிவி-யில் இந்த ஷோவை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழில் மாஸ்டர் செஃப் ஷோவை பிரபல முன்னணி நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழ் மாஸ்டர் செஃப் ஷோவில் செஃப் ஹரிஷ் ராவ், செஃப் ஆர்த்தி சம்பத், செஃப் கெளஷிக் எஸ் ஆகிய 3 ஜட்ஜ்கள் பங்கு பெற்றுள்ளனர். இதில் செஃப் ஆர்த்தி சம்பத் சமீபத்தில் மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரிக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்துள்ளார். ஆர்த்தி சம்பத் மும்பையில் குடியேறி இருந்தாலும் அவருடைய சில குடும்ப உறுப்பினர்கள் சென்னையில் இருக்கிறார்கள். மேலும் அவருடைய சில உறவுக்காரர்கள் இன்றும் சென்னை, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் வசித்து வருகின்றனர்.

Also read... சோஷியல் மீடியாவில் தந்தையை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!

இதனிடையே ஆர்த்தி, சாந்தினி சம்பத், மற்றொரு ஜட்ஜ் கெளஷிக் மற்றும் அவரது பிற நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருக்கும் சுற்றுலா இடங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார் செஃப் ஆர்த்தி சம்பத். மகாபலிபுரத்தில் தான் சுற்றி பார்த்த சிறந்த தருணங்களை வீடியோவாக ஷேர் செய்துள்ள, மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் உங்களுக்கு தமிழக வரலாற்றின் கதைகளைச் சொல்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று குறிப்பிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Aarthi Sampath (@aarthi_sampath)








 




View this post on Instagram





 

A post shared by Aarthi Sampath (@aarthi_sampath)






இவர் அமெரிக்காவின் பிரபல சமையல் நிகழ்ச்சியான "Chopped" ஷோவில் பங்கேற்று வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் சமையல்கலை நிபுணராவார். இதனை தொடர்ந்து "Chopped Masters" நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். 'பீட் பாபி ஃப்ளே' (Beat Bobby Flay) ஷுவில் பங்கேற்று, மிக திறமை வாய்ந்த சமையல் நிபுணரான பாபி ஃப்ளேவை தோற்கடித்துள்ளார் நமது செஃப் ஆர்த்தி சம்பத்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: