• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் 5-ல் தளபதி விஜய்யின் மாணவர் சிபி!

பிக் பாஸ் 5-ல் தளபதி விஜய்யின் மாணவர் சிபி!

சிபி

சிபி

பிக் பாஸ் 5-ம் சீசனில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவனாக நடித்த சிபி புவனசந்திரன் கலந்துக் கொண்டுள்ளார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாஸ்டர் பட நடிகர் சிபி கலந்துக் கொண்டுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார்.



    இதையடுத்து பிக் பாஸ் 5-ம் சீசனில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவனாக நடித்த சிபி புவனசந்திரன் கலந்துக் கொண்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்ததாகவும், பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து லண்டன் சென்று அங்கு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும் குறிப்பிட்டார். பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னை திரும்பிய சிபி, அதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: