ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மர்ம தேசம், ஜீ பூம்பா குழந்தை நட்சத்திரம் லோகேஷ் தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி!

மர்ம தேசம், ஜீ பூம்பா குழந்தை நட்சத்திரம் லோகேஷ் தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி!

மர்மதேசம் லோகேஷ்

மர்மதேசம் லோகேஷ்

மர்ம தேசம் தொடரை விடவும் 'ஜீ பூம்பா' சீரியல் லோகேஷூக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்து இருந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மர்ம தேசம் விடாது கருப்பு சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  1990ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி தொடர்களாக வெளியான மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களை 90ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள். மர்ம தேசம் விடாது கருப்பு தொடரில் ஒரு குதிரையை பார்த்தே பயந்து நடுங்கிய காலங்களும் உண்டு. இன்றும் அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் இருக்கிறது. சன் டிவி மற்றும் ராஜ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகிய இந்த தொடர்களில் நடித்த பலரும் தொடர்ந்து சின்னத்திரையில்  கலக்கி வருகிறார்கள்.

  'ரூமுக்கு வாங்க'! ஆதி புருஷ் இயக்குனர் மீது கோபப்பட்டாரா பிரபாஸ்? வைரலாகும் வீடியோ!

  சமீபத்தில் மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன. அந்த புகைப்படத்தில் பலரும் பார்த்து ஆச்சரியப்பட்டது குட்டி ராசுவாக நடித்த லோகேஷை பார்த்து. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்  ஆன லோகேஷ் ராஜேந்திரன் இளைஞனாக வளர்ந்து இருந்தார். மர்ம தேசம் தொடரை விடவும் 'ஜீ பூம்பா' சீரியல் லோகேஷூக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்து இருந்தது.

  இயக்குனர் நாகா அறிவுரையின் பேரில் நடிப்பை விட்டுட்டு இயக்கம், சினிமா சார்ந்த தொழில் நுட்ப வேலைகளில் லோகேஷ் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை இவர் இயக்கிய சில குறும்படங்கள் இணையத்தில் வெளியாகி பாராட்டுக்களை அள்ளி இருந்தன. கூடிய விரைவில் வெள்ளித்திரையில் படங்களை இயக்கவும் லோகேஷ் முயற்சி செய்து வந்து இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. தாமரை செல்விக்கு அடித்தது யோகம்!

  கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த லோகேஷை மீட்டு அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷை பரிசோதித்ததில் அவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், லோகேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

  சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லோகேஷ் காஞ்சிபுரத்தில் தாயுடன் வசித்து வந்ததும், குடும்ப பிரச்சனையால் லோகேஷ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக லோகேஷின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், லோகேஷின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை தான் காரணமா? என்பது குறித்து கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இயக்குனர் ஆக வேண்டும் என கனவுகளுடன் சுற்றி திரிந்த லோகேஷின் தற்கொலை திரையுலகினர் மற்றும் அவரின் நண்பர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

  தற்கொலை தடுப்பு தொடர்பு எண் :  104

  ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் :  044 – 24640050

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial