நூற்றுக்கணக்கான சீரியல்கள் இருந்தாலும் அவற்றில் சில சீரியல்களை மட்டுமே மக்கள் பெரும்பாலும் விரும்பி பார்ப்பார்கள். சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என பல சேனல்களில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீரியல்களில் மிக சில மட்டுமே மக்களின் மனம் கவரும் சீரியல்களாக உள்ளது. முக்கியமாக அவற்றில் நடிக்க கூடிய நடிகர், நடிகைகள், சிறந்த கதை, மற்றும் பிற கதாபத்திரங்கள் ஆகியவை அந்த சீரியலை நோக்கி மக்களை ஈர்க்கிறது.
அந்த வகையில் மக்களுக்கு பிடித்த பல புதிய சீரியல்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இவை இல்லத்தரசிகள், இளம் வயதினர்கள், மற்றும் பெரியவர்களை முக்கிய பார்வையாளராக கொண்டுள்ளது. இவை முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. அதன்படி, தற்போது 'மீண்டும் மண் வாசனை' என்கிற புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.
இதையும் படிங்க.. பாக்கியாவை மோசமாக ஏமாற்றும் கோபி.. விவாகரத்து வாங்க போவது உறுதி!
இந்த பெயரை கேட்டதும் பலருக்கும்
மண் வாசனை சீரியல் பற்றி நிச்சயம் ஞாபகம் வந்திருக்கும். ஆம், இந்தியில் பலிக்கா வந்து என்கிற பெயரில் இந்த மண் வாசனை சீரியல் ஒளிபரப்பாகி சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழில் இந்த தொடரை டப்பிங் செய்து மண் வாசனை என்கிற பெயரில் ஒளிபரப்பானது. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் சுமார் 8 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி 2016 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த சீரியல் 2000 எபிசோட்களை கடந்து வெற்றி நடை போட்டது.
எனவே இதை கருத்தில் கொண்டு இதன் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்க உள்ளனர். ஹிந்தியின் ஒளிபரப்பாக உள்ள இதன் இரண்டாம் பாகத்தை தமிழில் 'மீண்டும் மண் வாசனை' என்கிற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தகவல் பழைய மண் வாசனை சீரியல் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது.
பழைய மண் வாசனை சீரியலில் குழந்தை திருமணம் போன்ற சமூகத்தில் ஒழிய வேண்டிய சில முக்கிய விஷயங்களை கருத்தில் கொண்டு இயக்கினார்கள். இதில் ஆனந்தி கதாபாத்திரம் மிக முக்கிய பாத்திரமாக இருந்தது. முழுக்க முழுக்க ஆனந்தியை சுற்றி தான் பெரும்பாலும் இதன் கதை அமைந்திருந்தது. மேலும் அவளில் வாழ்க்கை போராட்டத்தை கொண்டு இந்த சீரியல் தொடர்ந்திருந்தது.
இதையும் படிங்க.. ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் கலர்ஸ் அம்மன் 3 சீரியல் நடிகை.. என்ன காரணம்?
இந்த மண் வாசனை தொடரில்
ஆனந்தி தனக்கான சுதந்திரத்தை கண்டடைவதை கதைக்களமாக வைத்திருப்பார்கள். இதனாலேயே பல இல்லத்தரசிகளுக்கு இந்த சீரியல் மிகவும் பிடித்திருந்தது. தற்போது ஒளிபரப்பாகி வரும் இதன் இரண்டாம் பாகமான மீண்டும் மண் வாசனை தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பாகம் ஒன்றை போலவே இதற்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்பது நிச்சயம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.