ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil 6: பிக் பாஸ் தமிழ் 6-ல் மன்சூர் அலிகான்?

Bigg Boss Tamil 6: பிக் பாஸ் தமிழ் 6-ல் மன்சூர் அலிகான்?

மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகானால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர் குறித்து பல நேர்க்காணல்களில் பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  Bigg Boss Tamil 6: நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருபவர் நடிகர் மன்சூர் அலிகான் தான். பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், அதன் பின்னர் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

  வில்லன் நடிப்புக்காக எவ்வளவு ரசிகர்களைப் பெற்றிருக்கிறாரோ, அதே அளவு தனது நடனத்துக்காகவும் நிறைய ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் மன்சூர் அலிகான். ஆட்டமா தேரோட்டமா, சக்கு சக்கு வத்திக்குச்சி, காபி தண்ணி போடட்டுமா என அவர் நடனமாடிய பாடல்களை பட்டியலிடலாம். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் கூட அவரின் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் பின்னணியில் ஒலிக்கும். அதன் பிறகு பலர் அந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டகிராமில் வெளியிட்டனர்.

  மன்சூர் அலிகானால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர் குறித்து பல நேர்க்காணல்களில் பேசியுள்ளார். கைதி படத்தையே அவரை நினைத்து தான் எழுதியதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து லோகேஷ் - விஜய் கூட்டணியில் உருவாகவிருக்கும் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் இடம்பெறுவாரா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

  முன்னணி நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை துவங்கவிருக்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் போட்டியாளராக கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு முழு எண்டெர்டெயின்மெண்ட் உறுதி.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil 6, Kamal Haasan