Home /News /entertainment /

‘அரபிக்குத்து’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட மனோபாலா... அதுவும் யார் கூடன்னு பாருங்க! 

‘அரபிக்குத்து’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட மனோபாலா... அதுவும் யார் கூடன்னு பாருங்க! 

மனோபாலா - விஜய்

மனோபாலா - விஜய்

அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான ‘அரபிக்குத்து’  வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்தாக விஜய் எந்த இயக்குநரை டிக் செய்யப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் கதைக்கு விஜய் ஓகே சொன்னதை அடுத்து, தளபதி 65 படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

  விஜய் - நெல்சன் திலீப்குமார் கரம் கோர்த்துள்ள படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார் படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி இந்த படம் உருவாகியுள்ளது உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

  பீஸ்ட் படத்தை வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அதன் பின்னர் 100 நாட்கள் ஷூட்டிங் முடிந்து விஜய் படக்குழுவினரிடம் இருந்து விடைபெறும் போட்டோவை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் படியாக எந்த அப்டேட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடாமல் இருந்து வந்தது.

  இந்நிலையில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, பீஸ்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியானது.அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான ‘அரபிக்குத்து’ வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. 'ஹலமதி ஹபிபோ' பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்தனர். அரபிக்குத்து பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே 25 மில்லியன் பார்வையாளர்கள் யூ-டியூப்பில் கண்டு ரசித்தனர். மேலும் 24 மணி நேரத்தில் 2.2 மில்லியன் லைக்குகளை பெற்று 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

  ET Teaser: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

  சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வரும் ‘அரபிக்குத்து’ பாடலை ரசிகர்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன?. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வேற லெவலுக்கு ஸ்டேப்பு போட்டு நடனமாடிய வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவேற்றி வருகின்றன. இந்த பாடலுக்கு நடனம் ஆடி பல சினிமா பிரபலங்களும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களாகவே சோசியல் மீடியா ட்ரெண்டாக நீடித்து வரும் அரபிக்குத்து பாடலுக்கு நடிகர் மனோபாலாவும் நடனமாடியுள்ளார்.  தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு பெயரை மாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

  மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் போட்டோவில் அவர் நடனமாடியதை விட, அவர் உடன் யார் நடனமாடியிருக்கிறார்கள் என்பது தான் கவனம் ஈர்த்துள்ளது. ஆம், பார்க்க ஆப்பிரிக்க பழங்குடியினர் போல் வேடமணிந்த கலைஞர் உடன் அரபிக்குத்து பாடலுக்கு மனோபாலா ஆட்டம் போட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் மனோபாலாவின் போட்டோவை பார்த்து, “இது அரபிக்குத்து இல்ல... ஆப்பிரிக்கா குத்து” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அரபிக்குத்து பாடல் வெளியிட்டுக்கு முன்னதாக நெல்சன், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகிய மூவரும் இந்த பாடலுக்காக கலந்துரையாடவது போன்ற கலகலப்பான புரோமோ வீடியோ, விஜய் வாய்ஸ் உடன் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay

  அடுத்த செய்தி