ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக அந்த விஷயத்தை வெளியே சொன்ன மணிமேகலை!

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக அந்த விஷயத்தை வெளியே சொன்ன மணிமேகலை!

மணிமேகலை

மணிமேகலை

அதை நினைத்தால் வேடிக்கையாக  இருக்கிறது என மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக ரெடி ஆகும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். கூட வே இந்த வீடியோவுடன் தனது பள்ளி மற்றும் கல்லூரி கால நிகழ்வுகளை பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சன் மியூஸிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு  ஹூசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு மாறினார். அதன் பின்பு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 , மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை,  குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

காதலுக்கு மரியாதை.. புது ஜோடி நவீன் - கண்மணி செய்த காரியம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இதன் மூலம் மிகப் பெரிய ரீச்சை அடைந்து இருக்கிறார் மணி. அதுமட்டுமில்லை யூடியூபில் ஹூசைன் மணிமேகலை என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மணி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)வார வாரம் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் கோமாளிகளுக்கு விதவிதமான கெட்டப்கள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் மணிமேகலைக்கு, வடிவேலு தங்கச்சி மணிமேகலை கெட்டப். ”வானத்தையும் பூமியும் பார்த்த வளர்ந்த புள்ள மணிமேகலை” என்ற காமெடி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒன்று. அந்த மணிமேகலை கெட்டப்பில்  தான் விஜே மணிமேகலை இந்த வாரம் கலக்க போகிறார். அதற்கு தயாராகும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லை இந்த பதிவில் மற்றொரு விஷயத்தையும் மணி குறிப்பிட்டுள்ளார், அதாவது, அவரின் பள்ளி, கல்லூரி நாட்களில்  நண்பர்கள்  இந்த காமெடியை வைத்து தான் மணியை கலாய்ப்பார்களாம். இன்று  அதே கெட்டபில்  நான் தோன்றுவது வேடிக்கையாக  இருக்கிறது என மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cook With Comali Season 2, Television, Vijay tv