Home /News /entertainment /

ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிய விஜய் டிவி மணிமேகலை..சம்பள ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள்!

ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிய விஜய் டிவி மணிமேகலை..சம்பள ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள்!

மணிமேகலை - ஹூசைன்

மணிமேகலை - ஹூசைன்

VJ Manimekalai | மணிமேகலை உங்களின் வருமானம் எவ்வளவு? அந்த ரசிகயத்தை மட்டும் சொல்ல கூடாதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சின்னத்திரையில் நடிகர்-நடிகைகள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, தங்களுக்கென்ற தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்குகின்றனர். சமீபத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த, தொலைக்காட்சித் தொகுப்பாளர் லிஸ்டில் இருப்பவர் மணிமேகலை. இன்ஸ்டாகிராமில் லட்சகணக்கான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள மணிமேகலை, காதல் திருமணம் செய்து கொண்டவர். இவர் தனது கணவர் ஹூசைனுடன் இணைந்து தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். முதல் கொரோனா லாக்டவுனில்  இவர்கள் இந்த சேனலை தொடங்கினார்கள். இதில் இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதன் மூலமும் இவர்கள் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருதாக சொல்லப்படுகிறது.

    இதைத்தவிர்த்து மணிமேகலை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்கிறார். 2 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 3 ஆவது சீசன் தொடங்கியுள்ளது. அதிலும் மணிமேகலை இருக்கிறார். சொல்லப்போனால் சன் மியூசிக், விஜே, ஆங்கரிங்கை விட மணிமேககலைக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

    இதையும் படிங்க.. விஜய் டிவி சீரியல்களில் மிகப்பெரிய மாற்றம்... அதிருப்தியில் ரசிகர்கள்!

    இந்நிலையில் அடிக்கடி மணிமேகலை விபத்தில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சுடு தண்ணீரை கொட்டி கொண்டது, காலில் அடிப்பட்டது, காரில் சென்ற போது விபத்தில் சிக்கி கொண்டது என அடிக்கடி தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை தருவார். கூடவே அடிக்கடி கார் வாங்குவது போன்ற நல்ல விஷயத்தையும் பகிர்ந்து கொள்வார். சமீபத்தில் bmw மற்றும் மற்றொரு காரை வாங்கி அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது மணிமேகலையும் ஹூசைனும் 2 ஏக்கரில் நிலம் வாங்கி இருக்கின்றனர். இதில் தற்போது வீடு கட்டும் பணியையும் அவர்கள் தொடங்கியுள்ளனர்.



    இதை பற்றிய விவரத்தை சில நாட்களுக்கு முன் மணிமேகலை தனது யூடியூப் சேனலில் vlogகாக வெளியிட்டுள்ளார். காதல் திருமணம் செய்து ஆரம்ப நாட்களில் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் பொருளாதார ரீதியாகவும் சில சிக்கல்களை எதிர்கொண்ட மணிமேகலை மற்றும் ஹுசைன் தற்போது மகிழ்ச்சியாக வசதியாக வாழ்ந்து வருகின்றனர். இதை பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் ஒருபக்கம் மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் தான் 2 கார் வாங்குனீங்க, அதுக்குள்ள 2 ஏக்கர் நிலமா? அப்படி என்றால் மணிமேகலை உங்களின் வருமானம் எவ்வளவு? அந்த ரசிகயத்தை மட்டும் சொல்ல கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதையும் படிங்க.. அசிங்கமாக பேசிய அந்த ஆடியோவை ரிலீஸ் செய்வேன்.. பிக் பாஸ் தாடி பாலாஜியை எச்சரிக்கும் நித்யா!

    பொதுவாகவே, நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு, நடிகர் நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும். விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை தொகுப்பாளர்களுக்கு ஸ்பெஷல் இடம் உள்ளது. தொகுப்பாளர்கள் ஒரு எபிசோடுக்கு பல ஆயிரம் முதல் லட்சத்திற்கும் அதிகமாக கூட சம்பளமாக வாங்குகிறார்கள் என்ற செய்தி அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில் மணிமேகலைக்கு என்ன சம்பளம் என தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி