Home /News /entertainment /

2 கார்.. 2 ஏக்கர் நிலம்.. விஜே மணிமேகலை சொத்து மதிப்பு குறித்து பரவும் தகவல் உண்மையா?

2 கார்.. 2 ஏக்கர் நிலம்.. விஜே மணிமேகலை சொத்து மதிப்பு குறித்து பரவும் தகவல் உண்மையா?

விகே மணிமேகலை

விகே மணிமேகலை

கடந்த சில தினங்களாக விஜய் டிவி பிரபலங்களின் சொத்து மதிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    விஜய் டிவி டிடி, கோபிநாத், மாகாபா ஆனந்த், பிரியங்காவை தொடர்ந்து விஜே மணிமேகலை சொத்து மதிப்பு குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை வெளியான தகவலே உறுதி செய்யப்படாத நிலையில் இப்போது மணிமேகலையின் சொத்து மதிப்பு விவரம் தலையை சுற்ற வைக்கிறது.

    90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் பெண் ஆங்கர்கள் லிஸ்டில் விஜே மணிமேகலைக்கும் இடம் உண்டு. சன் மியூசிக்கில் இவரிடம் பேச மணி கணக்கில் ரசிகர்கள் ஃபோனில் வெயிட் செய்வார்கள். எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவியான இவர் காலேஜில் படித்துக் கொண்டே பார்ட் டைமில் ஆங்கரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று மணிமேலைக்கு துணை நடன இயக்குனர் ஹுசைன் உடன் திருமணம் நடைப்பெற்றது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் விசேஷம்.. திரண்டு சென்ற சின்னத்திரை பிரபலங்கள்!

    இவர்களின் காதலுக்கு மணிமேகலையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ரியல் சூர்ய வம்சம் ஜோடியாக வலம் வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகியவர் விஜய் டிவி பக்கம் சென்றார். தொடர்ந்து மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்பு விஜய் டிவியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்கினார். அதன் பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி பட்டி தொட்டி எங்கும் ஃபேம்ஸ் ஆனார்.

    இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. விஜய்டிவி மாகாபாவின் சொத்து இத்தனை கோடியா?

    ஆங்கரிங்கை விடவும் குக் வித் கோமாளி ஷோ மணிக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி தந்தது. இதுத்தவிர தனது கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தொழிலில் வளர்ச்சி காண காண  சொந்த வாழ்க்கையிலும் உயர்ந்தார் மணிமேகலை. முன்பு தனி வீட்டில் இருந்தவர் இப்போது மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறியுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு 2 சொகுசு கார்களை வாங்கினார். இது தவிர 2 ஏக்கர் நிலத்தையும் வாங்கி அதில் வீடு கட்டும் வேலையில் இறங்கியுள்ளார். மணிமேகலையின் இந்த வளர்ச்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறனர். இந்நிலையில், மணிமேகலையின் சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

    கடந்த சில தினங்களாக விஜய் டிவி பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை டிடி, கோபிநாத், மாகாபா, பிரியங்கா சொத்து விவரங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் தற்போது விஜே மணிமேலலையின் சொத்து விவரம் $1 Million – $5 Million (இந்திய மதிப்பில் 7 கோடி முதல் 39 வரை) என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மை நிலவரம் இதுவரை கேள்வி குறியாகவே உள்ளது.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி