• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனக்கு ராசியே இல்லை.. கார் விபத்தில் சிக்கிய மணிமேகலை!

எனக்கு ராசியே இல்லை.. கார் விபத்தில் சிக்கிய மணிமேகலை!

விஜய் டிவி மணிமேகலை

விஜய் டிவி மணிமேகலை

2017இல் விபத்து நடந்த பிறகு திருமணம் ஆனது. தற்போது மீண்டும் விபத்து நேர்ந்துள்ளதால். 2021 முழுவதுமே எனக்கு சோதனை

  • Share this:
    விஜய் டிவி மணிமேகலை கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பித்துள்ளார். இதுக்குறித்த வீடியோவை அவரே தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

    விஜய் டிவி மணிமேகலை பற்றி அறிமுகமே தேவையில்லை. சன் மியூசிக்கில் விஜேவாக இருந்து ஹூசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டது வரை மணிமேகலை வாழ்க்கை அட்வென்ஜர்ஸ் நிறைந்தது தான். இவர்களை பற்றி தெரியாத பலரும் மிஸ்டர் & மிர்ஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் தெரிய வந்தது. ஏற்கெனவே காதலிக்கும் போது ஹூசைனை பார்க்க ஐதராபாத்தில் காரில் செல்லும் போது மணிமேகலைக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின்பு தான் பெற்றோர் சம்மதம் இல்லாமல் ஹூசைனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் மணிமேகலை கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

    குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை மகிழ்வித்த மணிமேகலை, இந்த கொரோனா லாக்டவுனில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தார். ஷூட்டிங் சென்ற போது லாக் டவுன் போட்டதால் அங்கிருந்த கிராமத்தில் தங்கினார். அதை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்த சில மாதங்களில் அவரின் காலில் சுட தண்ணீர் கொட்டியது. இப்படி 2021 ஆம் ஆண்டில் அடுத்தடுத்த சோதனைகளை சந்தித்த மணிக்கு கடந்த வாரம் ஒரு நல்ல விஷயம் நடந்தது. ஹூசைனும் மணிமேகலையும் BMW காரை வாங்கினார் விநாயகர் சதுர்த்தி அன்று இருவரும் கார் வாங்கிய ஃபோட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் பழைய காரில் ஹுசைனும் மணிமேகலையும் 2 நாட்களுக்கு முன்னர் வெளியே சென்றுள்ளனர். இரவில் லாங் டிரைவ் சென்ற இருவரில் மணிமேகலை தான் காரை ஓட்டிசென்றுள்ளார். இந்நிலையில் இவர்களின் கார் லாரி மீது இடித்து விபத்துக்குள்ளாகியது. நூலிழையில் உயிர் பிழைத்தாக மணிமேகலை அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய மணிமேகலை, ஜஸ்ட் மிஸ்ஸில் இருவரும் உயிர் தப்பினோம். என்று அந்த விபத்து குறித்த வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்



    அந்த வீடியோவில் மணிமேகலை “2017இல் விபத்து நடந்த பிறகு திருமணம் ஆனது. தற்போது மீண்டும் விபத்து நேர்ந்துள்ளதால். 2021 முழுவதுமே எனக்கு சோதனையாக இருக்கிறது. ராசி இல்லை போல. 2022 பிறந்தவுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன்” என்று கூறியுள்ளார். இதுக்குறித்து தனது இன்ஸ்டாவில் போஸ்ட் வெளியிட்டுள்ளார். இருவரையும் அவரின் நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: