மதம் மாறிவிட்டாரா மணிமேகலை? ரசிகரின் கேள்விக்கு பளிச் பதில்

தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை மதம் மாறிவிட்டரா என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

மதம் மாறிவிட்டாரா மணிமேகலை? ரசிகரின் கேள்விக்கு பளிச் பதில்
கணவருடன் மணிமேகலை
  • Share this:
தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மணிமேகலை. இவர் உசைன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ரம்ஜான் திருநாளான்று இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். “ரமலான் வாழ்த்துகள். முன்னாடி எல்லாம் ரம்ஜானுக்கு என் நண்பர்களிடம் பிரியாணி கேட்பேன். இப்போது என்னிடம் எல்லாரும் பிரியாணி கேட்கிறார்கள். ஒரே நகைச்சுவையாக இருக்கிறது" என்று பதிவிட்டு இருந்தார்.


மணிமேகலையின் பதிவை பார்த்த பலர் அவருக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் ரசிகர் ஒருவர் எப்படியோ ஒரு வழியாக மதம் மாறிவிட்டார் என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள மணிமேகலை, யாரும் இங்கும் மதம் மாறவில்லை. அவரும் என்னுடன் கோயிலுக்கு வருவார். அவர் பொங்கல் கொண்டாடுவார், நான் ரம்ஜான் கொண்டாடுவேன்“ என்று பதிவிட்டுள்ளார்.
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading