• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலிருந்து பிரபல ஜோடி விலகல்

விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலிருந்து பிரபல ஜோடி விலகல்

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை

மணிகண்டன் ராஜேஷ் - சோபியா ஜோடி Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலிருந்து பிரபல ஜோடி விலகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியும் ஒன்று. தற்போது அதன் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கோபி மற்றும் தேவதர்ஷினி நடுவர்களாக உள்ளனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கினர்.




    பின்னர் உடல்நிலை சரியில்லாமல் அர்ச்சனா மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து, தற்போது இந்நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் மைனா நந்தினி, காயத்ரி யுவராஜ், தீபா சங்கர், நடிகர் மணிகண்டன் ராஜேஷ், பாடகர் திவாகர் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் பங்கேற்றுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் ஒவ்வொரு ஜோடிக்கும் ரசிகர்களிடத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் மணிகண்டன் ராஜேஷ் - சோபியா ஜோடி Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணங்களால் இவர்கள் விலகியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தவிர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான மணிகண்ட ராஜேஷ் உணவகம் ஒன்றை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: