ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மந்திர புன்னகை

மந்திர புன்னகை

நடிகை சுப்ரிதா கூடிய விரைவில் காயத்ரியாக மக்கள் மனதில் இடம் பிடிப்பார் என சீரியல் குழு நம்பிக்கை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் மந்திரப் புன்னகை சீரியலில் இருந்து நடிகை மெர்ஷீனா நீனு விலகியுள்ளார். அவரின் விலகலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காதல், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புத்தம் புதிய குறுந்தொடர் ‘மந்திரப் புன்னகை’ இது ஆகஸ்ட் மாதம் முதல் திங்கள் - வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வருகிறது. சின்னத்திரையில் முதன்முறையாக 150 நாள் என வரையறுக்கப்பட்டு குறுந்தொடராக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலை ரசிகர்கள், பொதுவாக இளைஞர்கள் விரும்பி பார்க்கின்றனர்.

  ஜி.பி முத்து பயங்கர அறிவாளி.. பாராட்டி தள்ளிய வனிதா !

  இந்த தொடரில் காயத்ரி என்ற லீட் ரோலில் நடிகை மெர்ஷீனா நடித்து வந்தார். கதிராக ஹுசைன் அகமது கான் மற்றும் குரு விக்ரம் ஆக நியாஸ் கான் நடிக்கிறார்கள். புத்திசாலி பெண்ணான காயத்ரி காணாமல் போன தனது சகோதரியை கண்டுபிடிக்கவும்  மாபியா மன்னன் குரு விக்ரமை சிறையில் அடைப்பதற்காக தனது வாழ்க்கையை பணயம் வைக்கிறார். காதலன் கதிரை காதலித்தும் சகோதிரிக்காக குருவை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி பரபரப்பாக சீரியல் கதை சென்றுக் கொண்டிருக்க காயத்ரியாக நடித்த மெர்ஷீனா நீனு சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  இவருக்கு பதில் இனி காயத்ரியாக கன்னட நடிகை சுப்ரிதா சத்ய நாராயணன் நடிக்கவுள்ளார். சீரியலில் நேற்றைய தினம் இவரின்  என்ட்ரி டெலிகாஸ்ட் ஆகியது. ரசிகர்கள் பலரும் சீரியலில் மெர்ஷீனா நீனு இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் விலகலுக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் நடிகை சுப்ரிதா கூடிய விரைவில் காயத்ரியாக மக்கள் மனதில் இடம் பிடிப்பார் என சீரியல் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial