• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • இப்படியா பொய் சொல்வீங்க? பிக்பாஸ் நாடியா சாங்-கிற்கு மலேசிய தமிழர் சரமாரி கேள்வி!

இப்படியா பொய் சொல்வீங்க? பிக்பாஸ் நாடியா சாங்-கிற்கு மலேசிய தமிழர் சரமாரி கேள்வி!

நாடியா சங்

நாடியா சங்

ஒட்டு மொத்த மலேசியாவின் மானத்தையே நாடியா சங் வாங்கி விட்டதாக குற்றம்சாட்டி பேசியுள்ளார் அந்த நபர்.

 • Share this:
  ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரசிகர்களை கவர்ந்த மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5-ல் எதிர்பார்த்தபடி சிறு சிறு சர்ச்சைகள் ஏற்பட துவங்கி இருக்கின்றன.

  கடந்த வாரம் தங்கள் வாழ்க்கை வரலாற்றை பிக்பாஸ் போட்டியாளர்கள் சொல்லும் வகையில் கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்கள், அதனை கடந்து தாங்கள் மீண்டு வந்திருப்பது எப்படி உள்ளிட்டவை அடங்கிய சோகங்கள், சுவாரஸ்யங்கள் அடங்கிய தங்கள் வாழ்க்கை கதைகளை பகிர்ந்து கொண்டனர். இந்த டாஸ்க்கில் மலேசிய நாட்டை சேர்ந்த தமிழ் பிரபலமான நடியா சாங்கும் பங்கேற்றார்.

  அப்போது பேசிய நாடியா சாங் பெற்றோர் தனக்கு வைத்த பெயர் அருஜெயலட்சுமி. 3 பெண் பிள்ளைகள் கொண்ட எங்கள் வீட்டில் எனக்கு அக்கா மற்றும் தங்கை உள்ளார்கள். சிறுவயதில் இருந்தே வசதி என்றால் என்னவென்றே தெரியாமல் வறுமையில் தான் வாழ்ந்தோம். ஒரு ரூமில் நாங்கள் அனைவரும் ஒண்டிக்குடித்தனம் இருந்தோம். என் அப்பா குடிகாரர், என் அம்மாவோ கொடுமைக்காரர். அவர் என்னை அடித்தது போன்று வேறொரு தாய் இப்போது தன் குழந்தையை அடித்தால் அது குழந்தை வதை சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்படும்.

  அந்த அளவுக்கு என் தாய் என்னை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். சில சந்தர்பங்களில் போலீஸாரிடமும் மாட்டி விட்டு அடி வாங்க வைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே வேலைக்கு போய் விட்டதாகவும், அப்படி ஹோட்டலில் வேலை செய்யும் போது பார்த்து பழகி காதலித்தவர் தான் என் கணவர் சாங் என்றும் கூறினார். சைனீஸான என் கணவர் சாங், வந்த பிறகு தான் என் வாழ்வில் கட்டில் மெத்தையில் படுத்து தூங்கியது உட்பட பல வசதிகள் கிடைத்தது.

  சிறு வயதிலிருந்தே பெற்றோரின் பாசம், அரவணைப்பு கிடைக்காத நிலையில் இப்படி ஒரு கணவர் மற்றும் குழந்தைகள் கிடைத்துள்ளது வாழ்வில் மகிழ்ச்சி. இவர்களால் தான் நான் இந்த நல்ல நிலையில் உள்ளேன் என உருக்கமுடன் குறிப்பிட்டார். நாடியாவின் கதை பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் கூட அந்த அளவு கவரவில்லை என்றே சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மலேசிய தமிழர் ஒருவர் நாடியாவின் கதை முழுவதும் பொய் என்று குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

  ஒட்டு மொத்த மலேசியாவின் மானத்தையே வாங்கி விட்டதாக குற்றம்சாட்டி பேசும் அந்த நபர், 18 வயதிற்கு குறைவாக இருக்கும் போது வெளியே வேலை கிடைத்து இருக்காதே. எப்படி சிறு வயதிலேயே (14 வயது) ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தீர்கள்.? ஆண்கள் பிடிபட்டால் கூட மரியாதையாக நடத்தும் மலேசிய போலீசார் எந்த காலத்தில் சிறு பிள்ளையை அதுவும் பெண் பிள்ளையை அடித்து துன்புறுத்தும் கீழ்தரமான செயலில் ஈடுபட்டார்கள்? மொத்தமாக மலேசியன் போலீசையே அசிங்கப்படுத்தி, அவனமானப்படுத்தி உள்ளீர்கள்.  அப்படி ஒருவேளை நீங்கள் உண்மையிலேயே மலேசிய போலீசாரிடம் அடி வாங்கி இருந்தால் அந்த அளவிற்கு நீங்கள் என்ன பெரிய கேஸில் சிக்கினீர்கள். அதே போல உங்கள் அம்மா உங்களை படிக்க வைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். படிக்காமல் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய ஊதியம் வாங்கியது எப்படி என்றும் அந்த மலேசிய தமிழர் சரமாரியாக கேள்விகளை அடுக்கி இருக்கிறார். அதே போல முன்னாள் பிக்பாஸ் பங்கேற்பாளரான முகென் ராவ் அவர்களின் ரூட்டையே நீங்களும் ஃபாலோ செய்ய நினைத்து இது மாதிரியான பொய் கதைகளை சொல்கிறீர்களா என்றும் நாடியா சங்கிற்கு அந்த மலேசிய தமிழர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் தற்போது வைரலாகி வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: