பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மாதிரி படம்

அவரது உடனல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  கேரளாவின் பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகர் ரமேஷ் வலியசாலா திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (செப்டம்பர் 11 ) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 54.

  நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தை கைப்பற்றி உள்ள தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவருக்கு சில நிதி பிரச்னைகள் இருந்ததால் அவர் தற்கொலை முடிவுக்கு வந்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நடிகர் ரமேஷ் வலியசாலா


  அவரது உடனல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் தகவலின் படி, ரமேஷ் வலியசாலா அவரது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இன்று காலை 6.30  மணியளவில் அவரது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  Also Read : விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம்... மேடையில் ஓபனாக பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்

  சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன் ரமேஷ் தனது படப்பிடிலிருந்து திரும்பி உள்ளார். ரமேஷ் கடந்த 22 ஆண்டுகளாக சீரியல் துறையில் தீவிரமாக பணியாற்றி உள்ளார். ரமேஷ் அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது நாடக பின்னணயில் இருந்து தொலைக்காட்சி துறைக்கு வந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: