Home /News /entertainment /

'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' சீரியலில் இருந்து விலகிய சாயா சிங் - இனி அவருக்கு பதில் இவர் தான்!

'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' சீரியலில் இருந்து விலகிய சாயா சிங் - இனி அவருக்கு பதில் இவர் தான்!

சாயா சிங்

சாயா சிங்

Namma Madurai Sisters | 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் சாயா சிங், கடந்த 2011 ஆம் ஆண்டு 'நாகம்மா' சீரியல் வழியாக சின்னத்திரைக்குள்ளும் காலடி எடுத்து வைத்தார்.

2003ம் ஆண்டில் வெளியான 'திருடா திருடி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சாயா சிங், ராஜ்புத் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் ஆவார். பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்த காரணத்தினால் தன் கேரியரை கன்னட சினிமா வழியாகவே தொடங்கினார்.

2000 ஆம் ஆண்டில் வெளியான 'முன்னுடி' திரைப்படத்தில் அறிமுகமாகி தொடர்ச்சியாக 7 கன்னட படங்களில் நடித்த பிறகே சாயா சிங் தமிழில் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். சாயா சிங்சி தன் நடிப்பு திறனால் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்றாலும் கூட தன் நடன திறமையால் - குறிப்பாக மன்மத ராசா மற்றும் கும்பிட போன தெய்வம் போன்ற பாடல்களின் வழியாக - எக்கச்சக்கமான ரசிகர்களை ஈர்த்து தள்ளினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் சாயா சிங், கடந்த 2011 ஆம் ஆண்டு 'நாகம்மா' சீரியல் வழியாக சின்னத்திரைக்குள்ளும் காலடி எடுத்து வைத்தார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.



ஆனால் வருகிற மே 25 முதல் வரும் எபிசோட்களில் சாயா சிங்குக்கு பதிலாக நடிகை ஸ்ருதி லட்சுமி இந்திராணியாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் குறிப்பிட்ட சீரியல் தயாரிப்பாளர்களிடம் இருந்து வந்துள்ளதால், இது கிட்டத்தட்ட உண்மை என்றே நம்பலாம். போதாக்குறைக்கு சாயா சிங்கிற்கு மாற்றாக நடிக்க உள்ள ஸ்ருதி லட்சுமி, தான் அளித்த பேட்டி ஒன்றிலும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

Also Read : உங்களுக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள் தனம் - டி.இமானின் முன்னாள் மனைவி காட்டம்

ஸ்ருதி லட்சுமி ஒரு மலையாள டிவி சீரியல் நடிகை ஆவார். 'போக்குவெயில்' சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ருதி லட்சுமி, சிறந்த நடிகைக்கான மதிப்புமிக்க கேரள மாநில விருதையும் வென்று உள்ளார் என்பதும், இவர் 'நீ வருவாயா' என்கிற டிவி சீரியல் மூலம் ஏற்கனவே தமிழில் அறிமுகமாகி உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' சீரியலில் நடிப்பது குறித்து நடிகை ஸ்ருதி லட்சுமி, "இந்த கதாப்பாத்திரத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட தருணத்தில் இருந்து, இது எனது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கதாபாத்திரத்தின் ஆழம் என்னை மிகவும் ஈர்த்தது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறி உள்ளார்.

Also Read : இவருக்கு இதே வேலை தான்.. பிரபல சீரியல் நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! ஏன்?

'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' சீரியலின் கதைக்களம் ஆனது இந்திராணி, மேகலா, புவனா மற்றும் காவ்யா என்கிற நான்கு சகோதரிகளை சுற்றியே நகர்கிறது. இதில் மூத்த சகோதிரியாக சாயா சிங் நடித்து வந்தார், இனி அவருக்கு பதிலாக ஸ்ருதி லட்சுமி நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Entertainment, TV Serial

அடுத்த செய்தி