முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம் - அதிர்ச்சியில் சின்னத்திரை

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம் - அதிர்ச்சியில் சின்னத்திரை

சுபி சுரேஷ்

சுபி சுரேஷ்

ஆண் ஆதிக்கம் செலுத்தும் மிமிக்ரி மற்றும் தொலைக்காட்சி நகைச்சுவைத் துறைகளில் அவர் அரிதாக முன்னிலையில் இருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலையாள நடிகையும் தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ் இன்று காலை காலமானார். அவருக்கு 42 வயது.

சுபி கல்லீரல் பாதிப்பால் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடுமையான கல்லீரல் செயலிழப்பு பிரச்னையுடன் ஜனவரி 28-தேதி ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பிஆர்ஓ ஊடகங்களிடம் தெரிவித்தார். சுபிக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டதாகவும், நுரையீரல் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை அளிப்பது கடினமாக இருந்ததாகவும் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன் ஏசியாநெட்டில் ஒளிபரப்பான சினிமாலா என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் சுபி. பொதுவாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் மிமிக்ரி மற்றும் தொலைக்காட்சி நகைச்சுவைத் துறைகளில் அவர் அரிதாக முன்னிலையில் இருந்தார். கனகசிம்ஹாசனம், காரியஸ்தான், ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், எல்சம்மா என்ன ஆங்குட்டி, பச்சகுதிர உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மழவில் மனோரமாவில் 'மேட் ஃபார் ஈச் அதர்', சூர்யா டிவி-யில் 'குட்டி பட்டாளம்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெயர் பெற்றவர் சுபி. அவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial