• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாளவிகா வருங்கால கணவருடன் எடுத்த ஃபோட்டோ.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

மாளவிகா வருங்கால கணவருடன் எடுத்த ஃபோட்டோ.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

மாளவிகா சுந்தர்

மாளவிகா சுந்தர்

மாளவிகாவின் லிப்லாக் போட்டோவை பார்க்கும் பலர் வாழ்த்து தெரிவித்தாலும் சில நெட்டிசன்கள் இது ரொம்ப ஓவர் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

  • Share this:
    மாளவிகா தனது வருங்கால கணவருக்கு லிப்கிஸ் கொடுக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் சூப்பர் ஹிட் ஷோக்களாக தான் இருந்து வருகின்றன. வித்தியாசமாக அதே சமயம் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வேடிக்கையாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்வதால் விஜய் டிவி ஷோக்களுக்கு ரசிகர்கள் மிக அதிகம். இசை பாரம்பரியத்தில் இருந்து வராத திறமைமிக்க பல பாடகர்களின் திறமையை வெளி கொண்டு வந்து அவர்களுக்கு வாய்ப்புகளையும், பெரும் ரசிகர் வட்டத்தையும் ஏற்படுத்தி தேடும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர்.

    இப்படிப்பட்ட சூப்பர் சிங்கரில் பங்கேற்று அதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் மாளவிகா சுந்தர். தற்போது பிரபல பாடகியாக உள்ள மாளவிகா சுந்தர், சூப்பர் சிங்கர் சீசன் 3-ல் பங்கேற்று மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். தெலுங்கு மற்றும் தமிழ் உட்பட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    கடந்த 1988 ஆம் ஆண்டு  சென்னையில் பிறந்த மாளவிகா சுந்தர் சூப்பர் சிங்கர், இந்தியன் ஐடல், ஸ்வராபிஷேகம் உட்பட பல டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று இருக்கிறார். டோலிவுட் மற்றும் கோலிவுட்டின் சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவராக இருக்கும் மாளவிகா சுந்தருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த தகவலை இன்ஸ்டா மூலம் ரசிகர்களு அறிவித்த மாளவிகா, விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தனது வருங்கால கணவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்தார்.

    இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இன்ஸ்டாவின் Q & A செஷனில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் தன்னை விட தனது வருங்கால கணவர் 1 வயது குறைவானவர் என்றும் திருமணத்திற்கு வயது ஒரு தடையில்லை, பெண்ணை விட பையனுக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. எனவே இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Maalavika Sundar (@sundarmaalavika)






    இதனிடையே அடுத்த பரபரப்பாக மாளவிகா தனது வருங்கால கணவருக்கு லிப்கிஸ் கொடுக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். 33 வயதில் சரியான காதல் கதை கிடைத்தது (found perfect love story at 33) என்று கேப்ஷனிட்டு வருங்கால கணவரை @kashtagramm டேக் செய்து இருக்கிறார். இவரது லிப்லாக் போட்டோவை பார்க்கும் பலர் வாழ்த்து தெரிவித்தாலும் சில நெட்டிசன்கள் இது ரொம்ப ஓவர் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    &

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: