கடந்த சில நாட்களாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. நடிகை மீனா, நடிகர் கமல்ஹாசன், நடிகை ராதிகா சரத்குமார், விஜய் டிவி பிரபலம் டிடி என வரிசையாக ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகிய நிலையில் தற்போது விஜய் டிவி ஆங்கர் மா.கா.பா ஆனந்தின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தீயாய் பரவி வருகிறது. இதுக் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை இருப்பினும் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவும் இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம், அந்த தகவலில் மா.கா.பாவின் சொத்து மதிப்பு 4-5 மில்லியன் USD என குறிப்பிடப்பட்டுள்ளது.
சின்னத்திரை ஆங்கர் இத்தனை கோடிக்கு அதிபரா என ரசிகர்கள் வாயை பிளக்கின்றனர். பல்வேறு கஷ்டங்கள், தடைகளை தாண்டி இன்று ஸ்டார் ஆங்கராக ஜொலிக்கிறார் மாகாபா.விஜய் டிவியில் தனி ஒருவனாக மொத்த நிகழ்ச்சியை அசால்டாக ஆங்கரிங் செய்து வரும் மா.கா.பா 10 வருடங்களுக்கு மேல் இந்த துறையில் சாதித்து வருகிறார். நடுவில் வெள்ளித்திரைக்கும் சென்று வந்து விட்டார். ஆனால் அவருக்கு என்றுமே சின்னத்திரை தான் லக்கி ப்ளேஸ். இதுவரை மாகாபா வானவராயன் வல்லவராயன்,நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!
தற்போது சூப்பர் சிங்கர் ஷோ, ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதுபோக தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் அவரின் ஒவ்வொரு வீடியோக்களும் மில்லியன் பார்வையாளர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது போக அடிக்கடி குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலாவும் சென்று வருகிறார். மாகாபாவின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு அவர் தனது மனைவியை முதற் காரணமாக எல்லா இடத்திலும் பதிவு செய்துள்ளார் என்பதை குறிப்பிட வேண்டும்.
அவர் என்னை மடியில் அமர சொன்னார்.. பகீர் கிளப்பிய சீரியல் நடிகை ஸ்ரீநிதி!
மாகாபாவுடன் டிடி, பாவனா, பிரியங்கா என விஜய் டிவியின் அனைத்து ஸ்டார் பெண் தொகுப்பாளர்களும் ஆங்கரிங் செய்துள்ளனர். வெறும் விஜய் டிவியில் மட்டுமில்லை தனியார் விருது நிகழ்ச்சிகளையும் இவர் ஆங்கரிங் செய்ய தவறியது இல்லை. வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக ஜொலிக்கும் சின்னத்திரை நட்சத்திரம் மாகாபாவின் சொத்து மதிப்பு 4-5 மில்லியன் USD என்று குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்து வெளியாகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.