Home /News /entertainment /

மாகாபா ஆனந்த் பங்கு பெற்ற பாரிஸ் நிகழ்ச்சியின் நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

மாகாபா ஆனந்த் பங்கு பெற்ற பாரிஸ் நிகழ்ச்சியின் நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

மாகாபா ஆனந்த்

மாகாபா ஆனந்த்

தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் சமூகங்கள் மத்தியில் மாகாபா செம ஃபேமஸ். இந்த புத்தாண்டுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவியின் பிரபல (ஒரே!) தொகுப்பாளரான மா கா பா ஆனந்த் புத்தாண்டை கொண்டாட பிரான்ஸ்க்கு பறந்திருக்கிறார். அவர் ஈஃபிள் டவர் முன்பு நின்று கொண்டு டும் டும் டும் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் செம வைரல்.  

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட சூப்பர் சிங்கர், அது இது எது, குக் வித் கோமாளி போன்ற ஷோக்களுக்கு மவுசு அதிகம். மேலும்  ரியாலிட்டி ஷோ என்னும் கான்செப்டை தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவிதான்.

    அந்த வகையில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் தொகுப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து வருகின்றன. விஜய் டிவி பிரபலங்கள் ரீச் ஆகும் அளவுக்கு மற்ற சேனல் பிரபலங்கள் ஏனோ ரிச் ஆவதில்லை. 

    இன்றைய அளவில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சிவகார்த்திகேயன் `அது இது எது’ என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அவருக்கு அடுத்தபடியாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்த் தற்போது தமிழ் சின்னத்திரையின் ஸ்டார் ஆங்கர் ஆகிவிட்டார்.

    Sivakarthikeyan

    தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் சமூகங்கள் மத்தியில் மாகாபா செம  ஃபேமஸ். இந்த புத்தாண்டுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. 

    Vijay TV Ma Ka Pa Anand's salary details, makapa anand, ma ka pa anand, makapa anand real name, makapa anand car, makapa anand net worth, makapa anand salary, makapa anand daughter, makapa anand age, makapa anand wife name, ma ka pa anand contact number, மாகாபா ஆனந்த், விஜய் டிவி மாகாபா, விஜய் டிவி மாகாபா ஆனந்த் சம்பளம், விஜய் டிவி சூப்பர் சிங்கர்
    மாகாபா ஆனந்த்


    மாகாபா புத்தாண்டை கொண்டாட பாரீஸுக்கு சென்ற தகவல் வெளியானவுடன் சில யூ டியூப் சேனல்கள் ``அவரின் மனைவி சுஸினா ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் என்பதால் புத்தாண்டை அவர்  பாரீஸில் கொண்டாடியதாக’’ பதிவிட்டிருந்தனர். வழக்கம்போல் யூ டியூப் ரிப்போர்ட்கள் கெஸ்ஸிங் தவறு. மா.கா.பா ஆனந்த் குடும்பத்துடன் பாரீஸுக்கு சுற்றுலா செல்லவில்லை. மா கா பா, விஜய் டிவி பிரபலங்கள் சிலருடன் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஈவன்டுக்கு சென்றிருக்கிறார்.

    Paris newyear event
    பாரீஸ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு


     பாரீஸில் வசிக்கும் தமிழ் சமூகத்தினருக்கு நடத்தப்பட்ட இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ரோபோ ஷங்கர், குக் வித் கோமாளி பாலா, சூப்பர் சிங்கர் சாம் விஷால் உள்ளிட்டோரும் பங்கு பெற்றுள்ளார். இந்த நான்கு பேருக்கும் பாரீஸ் விமான நிலையத்தில் வெகு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.



     




    View this post on Instagram





     

    A post shared by MA KA PA Anand (@makapa_anand)






    நிகழ்வு முடிந்ததும் பாரீஸின் ஈபெல் கோபுரத்துக்கு விசிட் அடித்த மாகாபா, அங்கு நின்று டும் டும் பாட்டுக்கு நடனம் ஆடி இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார். இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் மாகாபா, சாம் விஷால், பாலா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் பங்குபெற்ற புத்தாண்டு நிகழ்வின் நுழைவு கட்டணம் 85 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 7200 ரூபாய். உண்மையில் விஜய் டிவி பிரபலங்களுக்கு தனி மவுசு தான்! 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Aswini S
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி