• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாகபா ஆனந்திற்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்கள் ஆச்சரியம்

மாகபா ஆனந்திற்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்கள் ஆச்சரியம்

மாகபா ஆனந்த்

மாகபா ஆனந்த்

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளரான மா.க.பா ஆனந்த், தனது குடும்பத்தோடு சூப்பர் சிங்கர் புகழ் ரோஷ்னி பேம்லியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

  • Share this:
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளரான மா.க.ப ஆனந்த், தற்போது சூப்பர் சிங்கர், மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரை, சிங்கிள் பொண்ணுங்க உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவரும், பிரியங்காவும் இணைந்து ஹோஸ்ட் செய்யும் சூப்பர் சிங்கர் ஷோ விஜய் டீவியின் படு ஹிட்டான ஷோ. அதில் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது. சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் முதல் நடுவர்கள் வரை என அனைவரையும் கலாய்த்து, குதூகலமாக ஷோவை எடுத்துச் செல்வார்கள்.

அவ்வப்போது, அவர்கள் வைக்கும் போட்டியும், அதற்கு வைக்கும் பெயரும் தான் லூட்டியின் உச்சமாக இருக்கும். தர லோக்கலில் போட்டிக்கு பெயர் வைப்பதில் இருவரும் கில்லாடிகள். அதனால், இவருமே சூப்பர் சிங்கர் பிராண்டின் அம்பாசிட்டர்கள் போல், அந்த ஷோவுக்கு நிரந்தர தொகுப்பாளர்களாகவே மாறிவிட்டனர்.
மா.க.பா ஆனந்த் தொகுப்பாளராக மட்டுமின்றி, ஊர் சுற்றுவதிலும், கிரிக்கெட் விளையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவருக்கென ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்தி வரும் மா.க.பா ஆனந்த், அதில் ஊர் சுற்றுவது முதல் கிரிக்கெட் விளையாடுவது வரை என அனைத்து வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். அவருடைய அனைத்து வீடியோக்களும் மில்லியன் பார்வைகளை கடந்துவிடுகிறது. பரத், பாலா, புகழ், டி.ஜே பிளாக் ஆகியோரையும் ஊர் சுற்றுவதற்கு அழைத்து சென்றுவிடுகிறார்.

செல்லும் இடத்தில் அவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு கொஞ்சம் நஞ்சமல்ல. சூப்பர் என்டர்டெயின்மென்டாக மா.க.பா பதிவுகள் இருப்பதால், அவர் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் தீயாக பரவுகிறது. அண்மையில், அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்து சூப்பர் சிங்கர் மற்றும் மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரையில் போட்டியாளராக கலந்து கொண்ட ரோஷ்னி குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.



அந்தப் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால், மா.க.பா ஆனந்திற்கு, சூசன் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது தெரியும். அவர்கள் யார்? என பலருக்கும் தெரியாது. அந்தப் புகைப்படத்தை பார்த்ததும், இவர்கள் தான் மா.க.பா ஆனந்தின் மகள் மற்றும் மகனா? என வியந்துள்ளனர். மா.க.பாவின் மகள் அனலியா லேகா (Anielia Lekha) மார்டன் டிரஸ்ஸில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். அதேபோல், மகனும் செம ஸ்மார்டாக இருப்பதால், மா.க.பாவின் குழந்தைகள் இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்களா? எனவும் வினவியுள்ளனர். அதேநேரத்தில், போட்டோவில் அனைவரும் கியூட்டாக இருப்பதாகவும் பாராட்டியும் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: