கணவருடன் விவாகரத்தாகி 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சின்னத்திரை பிரபலம் மகேஷ்வரி.
தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை, சினிமா நடிகை என தன் கரியரில் அடுத்தடுத்த வளர்ச்சியைப் பெற்றவர் வி.ஜே.மகேஸ்வரி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கினார். பின்னர் இசையருவியில் தனது பணியை தொடர்ந்தார். அப்படியே சினிமாவிலும் அறிமுகமாகி, சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் நடித்து வந்த மகேஸ்வரி, திருமணமான காரணத்தினால் தனது கரியருக்கு சற்று பிரேக் கொடுத்தார்.
குடும்பம், குழந்தை என சில காலம் நேரத்தை செலவிட்டவர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’தாயுமானவன்’, ‘புதுக்கவிதை’ ஆகிய சீரியல்களில் நடித்தார். மனைவியை இழந்த தந்தையையும் அவரது ஐந்து மகள்களையும் சுற்றி வரும் கதை தான் தாயுமானவன். தற்போது
தொலைக்காட்சி மற்றும் சினிமா என இரு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கமல் நடிக்கும் விக்ரம், விக்ரம் நடிக்கும் மகான், செல்வராகவன் நடிக்கும் சாணி காகிதம் போன்ற படங்கள் மகேஷ்வரியின் கைவசம் உள்ளது. சமீபத்தில் வெளியாகி
விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற ‘ரைட்டர்’ படத்திலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, மகேஷ்வரிக்கு விவாகரத்தாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கேசவ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது இரண்டாவது
திருமணம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், ”10 வருடத்திற்கும் மேலாக நான் சிங்கிளாக தான் உள்ளேன். நிறைய நேரங்களில் நம் வாழ்க்கை ஏன் சரியாக அமையவில்லை என்று கஷ்டப்பட்டுள்ளேன், ஒரு கட்டத்தில் இதுதான் நம் தலையில் எழுதி இருக்கும் தலையெழுத்து என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்திலேயே பிரிந்துவிட்டோம், குழந்தையை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். இரண்டாவது திருமணம் குறித்த பயம் எனக்கு அதிகம் உள்ளது. அவர் எப்படி இருப்பார், அந்த திருமணம் நீண்டநாள் வருமா என்ற பயம் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.