ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''தினமும் தீபாவளி.. லவ் யூ புருஷா..'' தல தீபாவளி கொண்டாட்டத்தில் மகாலட்சுமி-ரவீந்தர் ஜோடி!

''தினமும் தீபாவளி.. லவ் யூ புருஷா..'' தல தீபாவளி கொண்டாட்டத்தில் மகாலட்சுமி-ரவீந்தர் ஜோடி!

மகாலட்சுமி-ரவீந்தர்

மகாலட்சுமி-ரவீந்தர்

மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடி இன்று தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜே, சீரியல் நடிகை என அறியப்படும் மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை 2வது திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கு ஏற்கெனவே 6 வயதில் மகன் இருக்கிறார். இப்படி இருக்கையில் மகனின் சம்மத்துடன் 2வது திருமணம் செய்தார் மகா. இது காதல் திருமணம் ஆகும். இவர்களது திருமணத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தாலும் தேவையற்ற பல சர்ச்சைகளும் கிளம்பின. பிரபலங்களை துரத்தும் அதே பிரச்னையை மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடியும் சந்தித்தனர். ஆனால் எந்த வித பேச்சாக இருந்தாலும் எல்லா கேள்விகளுக்கும் கூலாக பதிலளித்த இந்த ஜோடி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் திருமணத்திற்கு பிறகு எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.


  திருமணத்திற்கு பிறகு டின்னர், ஃபைலைட் பயணம், திருச்செந்தூர் விசிட், தாலி பெருக்கு என மகாலட்சுமி - ரவீந்தர் இன்ஸ்டா பக்கத்தில் ஃபோட்டோக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த ஜோடி இன்று தன் தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் இயக்குநர் ஷங்கர்… ஒரே நாளில் படங்கள் ரிலீஸ்?

  தல தீபாவளி ஸ்பெஷலாக புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மகாலட்சுமி சிறிய கேப்ஷன் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். அதில், உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளுமே தீபாவளிதான். நாம் இப்படியே என்றென்றும் இருக்க உறுதி எடுப்போம். லவ் யூ புருஷா.. என பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் கமெண்டையும், தல தீபாவளி வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்


  கடந்த செப்டம்பர் 1-ம் தேதி சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். தற்போது ரவீந்தர் தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகாலட்சுமி. விஜேவாக இருந்து சீரியல்களில் முகம் காட்டிய மகாலட்சுமி, சீரியல்களில் நடிப்பதை விட்டு விட்டு, இனி சீரியல்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். மறுபுறம் அவரது கணவர் ரவீந்தர் சினிமா தயாரிப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கிய சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் அடுத்தடுத்து வீடியோ!


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Deepavali, TV Serial