மகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

மகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
  • Share this:
மகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் தற்கொலை மனமுடைந்த நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. நடிகை ஜெயஸ்ரீக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் தனது கணவர் ஈஸ்வர் தன்னுடன் நடிக்கும் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார்.


இந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் பிணையில் இருந்து பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே முறை தவறிய உறவு இருப்பதாகக் கூறினார்.

மாறி மாறி ஒவ்வொருவரும் தெரிவித்த புகார்களால் மக்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளானது. அதனால் ஈஸ்வர் மகாலட்சுமி நடிக்கும் தேவதையைக் கண்டேன் சீரியலும் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் கொஞ்ச நாட்களாக இந்தப் பிரச்னை ஓய்ந்துவிட்டது போல் தெரிந்தது. ஆனால் தற்போது மீண்டும் இப்பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. தனது குடும்ப பிரச்னையால் மனமுடைந்த நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அப்போது தனது தோழி ஒருவருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், “நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். வாழ்வதற்கு தகுதியற்றவளாக நான் உணர்கிறேன். இனிமேல் வாழ விரும்பவில்லை. எனக்கு இத்தனை நாள் ஆதரவளித்த உனக்கு நன்றி. என் அக்கா என்னிடம் எப்படிப் பேசுவாரோ அப்படி என்னிடம் நடந்து கொண்டாய். இது என்னுடைய குட் பை மெசேஜ்” என்று கூறியுள்ளார்.

ஜெயஸ்ரீயின் இந்த மெசேஜைப் பார்த்த அவரது தோழி, ஜெயலட்சுமி தற்கொலைக்கு முயல்வதை தெரிந்து கொண்டு அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை ஜெயஸ்ரீ.

மேலும் படிக்க: நான் பிரியா பவானி சங்கரிடம் காதலை வெளிப்படுத்தினேனா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்