Home /News /entertainment /

என்னப்பா சொல்றீங்க! மகாபாரதம் தொடர் கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்தது இந்த நடிகரா?

என்னப்பா சொல்றீங்க! மகாபாரதம் தொடர் கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்தது இந்த நடிகரா?

மகாபாரதம் கிருஷ்ணன்

மகாபாரதம் கிருஷ்ணன்

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்தி மற்றும் ஜீவாவுக்கு அப்பாவாக நடிக்கும் நடிகர் தசரதி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஸ்டார் விஜய் சேனலில் ஒளிப்பரப்பான மகாபாரதம் தொடரில் தமிழில் கிருஷ்ணனுக்கு குரல் கொடுத்தவர் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகர் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் இதிகாச தொடர்கள், புராணக்கதைகள், வரலாறு தொடர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக எடுக்கப்பட்ட பல தொடர்கள் மாபெரும் வெற்றியை கண்டுள்ளன. சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவிகளில் இதுவரை பல புராணத்தொடர்கள் ஒளிப்பரப்பாகி இருக்கின்றன. சில நேரங்களில் மற்ற மொழியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர்கள் தமிழில் இங்கு டப்பிங் செய்யப்பட்டு டெலிகாஸ்ட் ஆகியுள்ளன.

    cook with comali: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குக் வித் கோமாளி சந்தோஷ் - சுனிதா!

    அந்த வரிசையில் விஜய் டிவியில் தமிழில் ஒளிப்பரப்பான மகா பாரதம் தொடரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பஞ்ச பாண்டவர்கள், மற்றும் கௌரவர்களுக்கு இடையிலான நிகழ்வுகளை மையமாக கொண்டு எழுந்தப்பட்ட இந்த தொடரில் பல இந்தி ஹீரோக்கள், ஹீரோயின்கள் நடித்து இருந்தனர்.சின்னத்திரையில் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய தொடர் என்ற பெயரையும் மகாபாரதம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சீரியலை விட்டு வெளியே வந்ததும் அப்படியொரு ஃபோட்டோ! அர்ச்சனா என்னதான் சொல்ல வர்றீங்க?

    இந்த தொடரில் சீரியல் ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் கிருஷ்ணரின் கதாபாத்திரம் அந்த சூழலை விளக்குவது போன்ற சீன் தொடர்ந்து வைக்கப்படும். ரம்மியமான காவிய குரலில் கிருஷ்ணர் கவிதை வாசிப்பார். அந்த குரலை கேட்கும் போது சில சமயங்களில் நம்மை மறக்க நேரிடும். தொடர் முழுவதும் கிருஷ்ணரின் குரல் தேன் போல் இனிக்கும். குழந்தைகள்,பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கிருஷ்ணர் ரோலை தமிழில் ரசித்தனர். அதற்கு முக்கியமான காரணம் அந்த குரல். தமிழில் கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் வேற யாருமில்லை.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்தி மற்றும் ஜீவாவுக்கு அப்பாவாக நடிக்கும் நடிகர் தசரதி தான். இந்த தகவல் தற்போது இணையத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இவர் வெறும் நடிகர் மட்டுமில்லை மிகப் பெரிய டப்பிங் கலைஞரும் கூட.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி