Home /News /entertainment /

பிரபல சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் வில்லாதி வில்லி வந்தனா!

பிரபல சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் வில்லாதி வில்லி வந்தனா!

மகராசி வந்தனா

மகராசி வந்தனா

மகராசி சீரியலில் ரியாஸ்கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வில்லி ரோலில் வந்தனா மைக்கேல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    சன் டிவி மகராசி சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கிறார் வில்லாதி வில்லி வந்தனா மைக்கேல். இதுக் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மகராசி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 3 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த சீரியலில் ஸ்ரீரஞ்சனி, திவ்யா ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஆர். ஆர்யான், விஜய், ராம்ஜி, ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்த திவ்யா ஸ்ரீதர் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தற்போது லீட் ரோலில் ஸ்ரீத்திகா சனீஷ் நடித்து வருகிறார்.

    கணவர் சஞ்சீவின் பிறந்த நாள்.. வருத்தப்பட்ட ஆல்யா மானசா!

    ஸ்ரீத்திகா ஏற்கனவே மெட்டி ஒலிநாடகத்தில் நடித்துள்ளார். முத்தாரம் தொடரில் ஷாலினியாகவும், கலசம் தொடரில் மதுமிதாவாகவும் நடித்தார். உரிமை தொடரில் புவனா நட்ராஜன், குலதெய்வம் தொடரில் அலமேலு ஆகிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். தற்போது சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சன் டிவி மகராசி சீரியலில் வில்லியாக சின்னத்திரை நடிகை வந்தனா மைக்கேல் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வந்தனா, மகராசி ஸ்ரீத்திகாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

    உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி!

    வந்தனாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. பிரபலமான பல சீரியல்களில் நடித்து அதகளம் செய்த வில்லி நடிகை. ஆனால் ஆரம்பமானது சன் டிவி-யில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் தான்.டிவி-யில் ஒளிபரப்பான ’காதல் முதல் கல்யாணம் வரை’ சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து மிரட்டினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’மெல்ல திறந்தது கதவு’ உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்து அசத்தினார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vandana Michael (@vandanamichael3)






    இந்நிலையில் சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் வில்லியாக மிரட்ட வருகிறார். மகராசி சீரியலில் ரியாஸ்கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வில்லி ரோலில் வந்தனா மைக்கேல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி