தமிழ் டிவி சேனல்களில் மிகவும் பிரபலமாகவும் ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருக்கும் ஒரு சேனல் விஜய் டிவி. பிற முக்கிய சேனல்களை போலவே வாரநாட்களில் சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை ஈர்க்கும் அதே நேரத்தில், வார இறுதி நாட்களில் விதவிதமான மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி பிற சேனல்களுக்கு கடும் டஃப் கொடுப்பதில் விஜய் டிவி-க்கு நிகர் விஜய் டிவி தான். எங்கிருந்து கான்சப்ட் பிடிப்பார்கள் என்றே தெரியவில்லை, ஆனால் டெலிகாஸ்ட் செய்யப்படும் ரியாலிட்டி ஷோக்கள் ஒவ்வொன்றும் பெருமளவிலான ரசிகர்களை ஈர்த்து சேனல் முன் உட்கார வைத்து விடுகின்றன.
அதிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்டார்
விஜய் டிவி-யின் ஷோக்களை பார்த்து கொள்ளலாம் என்பதால், சேனலில் பார்க்க தவறினால் கூட ஹாட்ஸ்டாரில் மறக்காமல் பார்த்து விடுகிறார்கள் ரசிகர்கள். விஜய் டிவி-யின் மிக பிரமாண்ட மெகாஹிட் ரியாலிட்டி ஷோவாக கடந்த 5 வருடங்களாக இருந்தது வருகிறது பிக்பாஸ். ரசிகர்களின் பேராதரவு காரணமாக தற்போது பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி வெர்ஷனாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், ஸ்டாட் மியூசிக், பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட பல ஷோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோ ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதே போல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களை வைத்து கலக்கலான சூப்பர் டாடி (super-daddy) ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோ இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
இதையும் படிங்க.. மகனை பார்த்து கதறி அழுத சர்வைவர் விஜயலட்சுமி!
இந்த ஷோவில் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று வருகிறர்கள். இதில் வாரா வாரம் சில வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதை சரியாக செய்யாதவர்கள்
எலிமினேட் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் ஷோ இறுதி ரவுண்டை நெருங்கி இருக்கிறது. இதில் பங்கேற்கும் சூப்பர் டாடி போட்டியாளர்களில் ஒருவரான காமெடி பிரபலம் மதுரை முத்து, தனது முதல் மனைவி விபத்தில் இறந்த போது குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை அழுது கொண்டே பகிர்ந்துள்ளார்.
https://youtu.be/NF2qaVV1JoA
super daddy ஷோவின் லேட்டஸ்ட் ப்ரமோ வீடியோ ஒன்றில் பேசும் மதுரை முத்து, ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும், அம்மாவாகவும் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை என் முதல் மனைவி இறந்த பின் உணர்ந்தவன் நான். தனது பெண் குழந்தை பாத்ரூம் போய்விட்டு வரும் போது ஜிப் போடா வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது வேறு வழியின்றி வேறு ஒருவரின் மனைவியை கூப்பிட்டு
என் பெண்ணுக்கு உதவ சொல்வேன்.
இது போன்று பல நெருக்கடிகளை சந்தித்ததாக மதுரை முத்து பலமாக அழுது கொண்டே கூற, இதை பார்த்து செட்டில் இருக்கும் அனைவரும் அழுகிறார்கள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் மதுரை முத்து அழுதிருப்பது இந்த வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்களையும் கண்கலங்க செய்து உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.