மெய்சிலிர்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறு : நாளை History TV18 தொலைக்காட்சியில்...

பதினான்கு வானுயர கோபுரங்களும் கொண்ட இந்த கோவில், கலைத்திறமை மற்றும் வடிவியல் துல்லியத்திற்கு சான்றாகும்.

  • Share this:
இந்தியாவிற்கான மூலமுதலான தயாரிப்புகளில் மேலும் ஒன்றாக HistoryTV18 முதன்முதலாக 'Meenakshi Amman & The Marvel of Madurai' நிகழ்ச்சியை மே 4, திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு முதன்முதலில் ஒளிபரப்புகிறது.

இதுவரை சந்தித்திராத சவாலை உலகம் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், மக்கள் நலனுக்காக பொதுவிழாக்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருக்கும் இவ்வேளையில், HistoryTV18 வீட்டிலிருக்கும் சின்னத்திரைகளுக்கு சித்திரை திருவிழாவையும் புகழ்வாய்ந்த மீனாட்சி கோவிலையும் கொண்டுவந்து மெய்சிலிர்க்கும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி திருக்கல்யாண நாளன்று முதன்முதலாக ஒளிபரப்பாகிறது.

2019 இல் படமாக்கப்பட்ட இந்த ஆவணப்படம் பழங்கால நகரமான மதுரையின் தாய்க்கடவுள், அரசி, மற்றும் காக்கும் கடவுளான மீனாட்சி அம்மனின் பழங்கதையை பெருமையுடன் கொண்டாடுகிறது. இப்படம், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்தில் நடக்கும் இவ்விழாவின் முதல் இரண்டு வார கொண்டாட்டங்களையும், முக்கிய நிகழ்வுகளுக்கான பின்வேலைகளையும், அதனூடே நடக்கும் உண்மைக் கதைகளையும், அவற்றின் சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவங்களையும் பார்வையாளர்களுக்கு காட்டுகிறது.
இப்படம், சித்திரைத் திருவிழாவின் இதுவரை காணாத காட்சிகளை வழங்கி, அதன் வரலாற்றை தேடி, அதிசய உண்மைகளை வெளிக்கொணர்ந்து, வியப்பில் ஆழ்த்தும் நாட்டுப்புற கதைகளுக்குள்ளும் நம்மை கொண்டு செல்கிறது. இதன் கதைக்கூற்று, அம்மனுடனும், அம்மனின் கோவிலுடனும், ஆண்டாண்டு நடக்கும் இதன் முக்கியமான விழாவுடனும் பின்னிப்பிணைந்துள்ள மக்களின் கதைகளைச் சார்ந்து உள்ளது. இந்த ஆவணப்படம், மாபெரும் இந்த விழாவிற்கான திட்டமிடுதல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற அம்சங்களையும் காட்சிப்படுத்துகிறது.

இப்படம், மதுரையின் இந்த அடையாள சின்னத்தின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவத்தையும், இதன் ஆரம்ப தோற்றம், விரிவாக்கம் மற்றும் இன்றைய அமைப்பு போன்றவற்றையும் ஆராய்கிறது. 14 ஏக்கர் பரந்துள்ள இந்த கோவில் வளாகத்தின் கலை மற்றும் கட்டடவியல் அற்புதங்களை உயர்-துல்லிய மற்றும் 4K கேமராக்கள் வெளிப்படுத்தி, வல்லுனர்கள் மற்றும் கோவில் அதிகாரிகளின் இவை குறித்த பார்வைகளையும் விளக்கங்களையும் வழங்குகிறது.

பிரமிக்க வைக்கும் 33,000 நுணுக்கமான சிற்பங்களும், வண்ணம் தீட்டப்பட்ட மேற்கூரைகளும், மண்டபங்களும், தூண்களும், கோவில்களும், மற்றும் ஆயிரக்கணக்கான புராண கதாபாத்திரங்களும் வினோத உயிரின சிற்பங்கள் அலங்கரிக்கும் பதினான்கு வானுயர கோபுரங்களும் கொண்ட இந்த கோவில், கலைத்திறமை மற்றும் வடிவியல் துல்லியத்திற்கு சான்றாகும். அசரவைக்கும் காட்சியமைப்புககளுடனும் படத்தொகுப்புடனும் இந்த கதையமைப்பு, தென்னிந்தியாவிற்கே உரித்தான கைவினைத்திறனையும், பொறியியல் மற்றும் கலாச்சார மேன்மையையும் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

ஒரு வருடம் எடுத்துக்கொண்ட இந்த மூலமுதலான தயாரிப்பு, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நாட்களான அம்மனுக்கு முடிசூட்டு விழாவான 'பட்டாபிஷேகம்', 'திருக்கல்யாணம்', மற்றும் 'தேரோட்டம்' நடக்கும் நாட்களின் கோலாகல கொண்டாட்டங்களை படம் பிடித்து காட்டுகிறது. மதுரையின் வைகை ஆற்றில் லட்சகணக்கான மக்கள் கூடும், விஷ்ணு பெருமானுக்கு பெருமை சேர்க்கும் கள்ளழகர் விழாவும் இதில் இடம்பெறுகிறது. கண்ணைக்கவரும் காட்சியாக மட்டுமின்றி இவ்விழா சமூக-அரசியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது.

தெய்வீக பெண் சக்தியின் மூலமாக விளங்கும் அம்மனின் அருள்தரும் ஒளியும், மக்களின் அன்பும் நம்பிக்கையும், வண்ணமயமான பிரம்மாண்டமான திருவிழாவும் மீண்டும் மீண்டும் காணத்தூண்டும். HistoryTV18 இன் உயரிய தயாரிப்பு மதிப்பும், விருதுகளை வெல்லும் மூலமுதலான தயாரிப்புகளின் தன்மையும் இந்நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்றாக ஆக்குகிறது.


 

 

 
First published: May 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading