• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெர்மனி மாடல் டூ பிக் பாஸ் நிகழ்ச்சி.. தமிழ் ரசிகர்களுக்கு ஏஞ்சலாக மாறிய மதுமிதா ரகுநாதன்!

ஜெர்மனி மாடல் டூ பிக் பாஸ் நிகழ்ச்சி.. தமிழ் ரசிகர்களுக்கு ஏஞ்சலாக மாறிய மதுமிதா ரகுநாதன்!

மதுமிதா ரகுநாதன்

மதுமிதா ரகுநாதன்

ஐடி படிப்பை தொடரும் போது காதல் ஏற்பட்டு அந்த உறவால் மன அழுத்தம் எற்பட்டு தற்கொலை முயற்சி வரை சென்று இருக்கிறார் மதுமிதா.

  • Share this:
    தனது குயில் குரலாலும் தமிழ் பேச முயற்சிக்கும் குணத்திற்காகவும் பிக் பாஸ் இளைஞர்களின் ஏஞ்சலாக மாறி இருக்கிறார் ஜெர்மனியில் இருந்து வந்த மதுமிதா ரகுநாதன்.

    ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. 4 சீசன்களும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பிக்பாஸின் 5-ஆம் சீசன் உற்சாகமாக துவங்கியது. இந்த சீசன் மொத்தம் 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. இசை வாணி, ராஜு, மதுமிதா, யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்டோருடன் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமானது

    வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வரவேற்பை அதிகரிக்க ஒவ்வொரு சீசனிலும் சில வெளிநாட்டு வாழ் தமிழ் போட்டியாளர்கள் பிக் பாஸில் பங்கேற்க வைக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மலேசியாவில் சீரியல் மற்றும் மாடலிங்கில் பிஸியாக இருந்து வரும் நாடியா சாங் நடப்பாண்டு பிக்பாஸில் பங்கேற்று இருந்தார். அதே போல் ஜெர்மனியில் மாடலாகவும் பேஷன் டிசைனராகவும் இருந்த மதுமிதா ரகுநாதன் போட்டியாளராக கலந்து கொண்டார். இவரின் தாய் மற்றும் தந்தை இலங்கையை சேர்ந்தவர்கள். மதுமிதா தற்போது பிக் பாஸ் வீட்டில் பெரிதாக விளையாடி சூப்பர் ஃபெப்ஃபாமர் என பெயர் எடுக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் ஏஞ்சலாகவே தெரிகிறார். அவரின் குயில் குரலும், தமிழும், பாட்டு பாடு விதமும், அவரை எல்லோரும் கலாய்க்கிறார்கள் என தெரிந்தும் அதை டேக் இட் ஈஸி என கடந்து செல்லும் இடங்களில் ரசிகர்களை கவர வைக்கிறார் மதுமிதா. இவர் ப்ரியங்கா மற்றும் நிரூப்பிடம் அதிகம் நெருக்கமாக பழகுவதை பார்க்கலாம்.

    இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஜெர்மனியில் தான். மதுமிதாவுக்கு பேஷன் என்றால் ரொம்ப இஷ்டம், அதனால் தான் பேஷன் டிசைன் படித்து முடித்தபிறகு அக்காவுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார் மது. அங்கு ஒரு மிகப் பெரிய கம்பெனியில் டிசைனர் ஏஜென்சியாக வேலை செய்தார். ஆனால் விசா காரணத்தால் ஜெர்மனிக்கு திரும்ப வந்துவிட்டார். ஜெர்மனியில் அவர் இருந்தது சின்ன சிட்டி என்பதால் அங்கு அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஐடி படிப்பை தொடரும் போது காதல் ஏற்பட்டு அந்த உறவால் மன அழுத்தம் எற்பட்டு தற்கொலை முயற்சி வரை சென்று இருக்கிறார் மதுமிதா. பின்பு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தவர் திரும்பவும் டிசைனில் கவனம் செலுத்த தொடங்கினார்.



    பல கம்பெனிகளில் விளம்பர மாடலாகவும் மதுமிதா பணி புரிந்துள்ளார். இவரின் நெருங்கிய தோழி பாடகி தீ. இவர் மூலம் தான் மதுமிதாவுக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தகவல் வெளியாகின. ஆனால் அதன் உண்மை நிலவரம் பற்றி தெரியவில்லை. டிவியை பார்த்தே தமிழ் பேச கற்றுக் கொண்ட மதுமிதா இன்று பிக் பாஸ் வீட்டில் முடிந்த வரை தமிழில் பேசி கமலிடம் பாராட்டும் பெற்றுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: